அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள்...
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள்...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ச.இராகவன்  
Sunday, 19 September 2004

 4    ராஜேஷ் குமார்

ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்களில் ரமணிசந்திரனின் நாவல்கள் பெண்வாசகர் மத்தியில் எவ்வளவுக்கெவ்வளவு வரவேற்பைப் பெற்றுள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு, ராஜேஷ்குமாரின் திகில் - மர்மநாவல்கள் ஆண்வாசகர் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகின்றன.

ராஜேஷ்குமார்ஜனரஞ்சக வார, மாத இதழ்களில் 'க்ரைம் கிங்'  'க்ரைம் சக்கரவர்த்தி' என வர்ணிக்கப்பட்டுவரும் ராஜேஷ் குமார், ஆயிரம் நாவல்களை எழுதி முடித்த ஒரேயொரு தமிழ் எழுத்தாளன் என 'கின்னஸ்' புத்தகத்தில் தனது பெயரினைப் பதிவுசெய்திருக்கும் “பெருமைக் குரியவர்” என்ற தகவல், ஜனரஞ்சக இதழ்களின் வாயிலாகத் தெரிய வந்துள்ளது. நல்ல நாவல் ஒன்றிற்குரிய சிறப்பியல்புகளோடு இவரது நாவல்களின் இயல்புகள் அல்லது பொதுப் போக்குகளை ஒப்பிட்டுப்பார்த்தால், அவை நாவல்களாகக் கருதப்பட முடியாதவை என்பதே வெளிப்படும் உண்மையாகும்.

பொதுவாக இவரது நாவல்களில் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்புகளைக் காணமுடியாது. தனித்து விற்பனை நோக்கில் இடம் பெறும் கதைத்தயாரிப்புகளே இவரது “நாவல்களாக” வெளிவருகின்றன.
 
இந்தியாவிலேயே மிகஅதிகமாக விற்பனையாகும் மாத நாவல்கள் ராஜேஷ்குமாருடையவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாவல்களின் உள்ளடக்கம் என்பது கொலை, ஆட்கடத்தல், பழிவாங்கல், வன்முறைகள், வல்லுறவுகள், திகில், மர்மம் என்ற வரையறைகளுக்குள் வருவதுதான். 'தினம் தினம் திகில் திகில்'  'என் இனிய விரோதியே'  'இறப்பதற்கு நேரமில்லை'  'டைனமெற் குறிவைச்சாச்சு'  'ரத்தத்தில் ஒரு கேள்விக்குறி'  'ஊதாநிறத் தீவு'  'ஆகஸ்ட் 5 அதிகாலை'  'மோகனா முப்பதுநாள்'  'சிந்தியரத்தம் இந்தியரத்தம்' 'ஐந்து கிராமம் நிலவு' 'ஓடாதே ஒளியாதே' 'உயிர் உதிர்காலம்'  'கொலைக்காண்டம்' 'உன்வானம் என் அருகில்' என கவர்ச்சிகரமான அதிர்ச்சியை வாசகனுக்குத் தரக்கூடிய தலைப்புகளில் இவரது நாவல்கள் வந்தவண்ணமிருக்கின்றன.

நெருக்கடி மிகுந்ததொரு நிலைமையை அறிமுகமாக்கி, மேலும் மேலும் சிக்கல்களை அதிகரித்து, தனது ஆஸ்தான நாயகனும் நாயகியுமான விவேக், ரூபலா எனும் இருவரையும் களமிறக்கி, எதிர்பாராத திடீர்த் திருப்பங்களுடன் விவேக்கை சாகசம் மிகுந்த ஒரு வீரனாகக்காட்டி பொழுதுபோக்கு வாசகனுக்கு திருப்தியளிக்கக்கூடிய முடிவினைத் தருவதே இவரது கதைத்தயாரிப்புகளின் பொதுவான போக்காகும்.

இவர் கையாளும் மொழியென்பது மூன்றாந்தர வாசகனைக் கவர்ந்திழுக்கும் வணிகரீதியான கூர்மையைக் கொண்டிருப்பதும், ஆங்கிலத்தில் வெளியாகும் மர்மநாவல்களைத் தழுவி கதைத்தயாரிப்பைச் செய்துவருவதும், இவரது நாவல்கள் சாதாரண - மூன்றாந்தர வாசகனை கவர்ந்திழுப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியது. 

ராஜேஷ்குமார் முன்பொருமுறை 'குமுதம்' இதழில் தெரிவித்திருப்பதாவது: “இப்போதுள்ள ஹீரோக்களில் யார் வேண்டுமானாலும் விவேக் பாத்திரத்தை ஏற்று நடிக்கலாம். ஆனால் எனது பார்வையில் விவேக் ஒரு ஹேண்ட்சம் இளைஞன். மனைவி ரூபலாவுடன் ஊடல் செய்துகொண்டே - அவள்மேல் பாசத்தைப் பொழிபவன், எத்தகைய ஆபத்துக்களையும் புன்னகையோடு எதிர்கொள்பவன். விவேகத்தோடும், வேகத்தோடும் எதிரிகளோடு மோதி அவர்களைச் சாய்ப்பவன். இந்தத் தகுதிகளை வைத்துப் பார்க்கும் போது - மற்ற ஹீரோக்களை விட கமல் ஒரு நூலிழையில் முந்திக் கொண்டு வெற்றிபெறுகிறார். இப்போதுள்ள நடிகைகளில் ரூபலா கேரக்டருக்கு - ராதிகாவும் அமலாவும் செமி ஃபைனலில் மோதுகிறார்கள். ரூபலா அழகானவள். கொஞ்சம் பயந்த சுபாவம். விவேக்கோடு சரிக்குசரி வாயாடுபவள். இந்த மூன்று தகுதிகளில் முன்றாவது தகுதி மட்டும் ராதிகாவிடம் இருக்கிறது. முதல் இரண்டில் கொஞ்சம் வீக். மூன்று தகுதிகளுக்கும் அமலாவைப் பொருத்திப் பாருங்கள். டிக்.டிக்.டிக்.”

மூன்றாந்தரவாசகன் விவேக்குறித்தும், ரூபலா குறித்தும் எதிர்பார்ப்பதும் இதைத்தானே!

ஜி. அசோகன் என்னும் பதிப்பாளர் ராஜேஷ்குமாரின் “கதைத் தயாரிப்புகளுக்காகவே”  'க்ரைம் நாவல்' எனும் கைக்கடக்கமான மாதநாவல் வெளியீட்டை நடத்திவருகிறார். குறித்தவொரு மாதத்தின் நாவலிலேயே வாசகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் அடுத்த மாத நாவலின் பரபரப்பூட்டும் தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கும். தவிரவும் குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் போன்ற இதழ்களில் ராஜேஷ்குமார் தொடர் நவீனம் எழுத ஆரம்பித்தால் அவற்றின் விற்பனை வழமையை விட கணிசமாக உயர்வடைவதாகவும் கூறப்படுகிறது.

முடிவாக, ராஜேஷ்குமாரின் “கதைத்தயாரிப்புக்கள்” ஏற்படுத்திவரும் ஆபத்தான விளைவுகள் இரண்டு.
  + ஒன்று, மோசமான கற்பனா உலகினுள் வாசகனை உள்ளிழுப்பதன்மூலம் அவன் தீவிர - நல்ல இலக்கியங்களின் பால் நாட்டங்கொள்ள விடாமல் தடுக்கிறது
  + இரண்டு, இந்தக் கதைத்தயாரிப்புகளுடன் பரிச்சயமாகி எழுத்தாளர்களாக வெளிக்கிடுகிற வர்கள், இதே பாணியில் (ஈழத்திலும் தமிழ்ள நாட்டிலும்) பயனற்ற கதைத் தயாரிப்புகளையே செய்ய விருப்பங்கொள்கின்றனர்!


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52
TamilNet
HASH(0x556e38eeef28)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52


புதினம்
Thu, 25 Jul 2024 02:52
     இதுவரை:  25413706 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9361 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com