அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow பணத்திற்காக கலையில் விபச்சாரம்: இசைநாடகம் வளர்ச்சியடையவில்லை!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பணத்திற்காக கலையில் விபச்சாரம்: இசைநாடகம் வளர்ச்சியடையவில்லை!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இசைத்துறை விரிவுரையாளர் த. றொபேட்  
Sunday, 19 September 2004

“இசைநாடகங்களால் அறிமுகமான கர்நாடக இசை இங்கு இன்று நன்கு வளர்ச்சியடைந்துள்ளது@ ஆனால், இசைநாடகம் போதிய வளர்ச்சியடையவில்லை. பணத்திற்காக கலையில் விபச்சாரம் புரிகிறார்கள்.”

யாழ். திருமறைக் கலாமன்ற இசைநாடக விழாவையொட்டிய கருத்தரங்கின் மூன்றாம் நாளன்று (04.07.2004) பேசுகையில், யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை இசை விரிவுரையாளரான த. றொபேட் மேற்கண்டவாறு கூறினார்.

"ஈழத்தில் கர்நாடக இசைப் பாரம்பரியமும் இசைநாடகமும்" என்ற தலைப்பிலான தனது உரையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

1920 ஆம் ஆண்டளவில் இசைநாடகக் கலைஞர்கள் தமிழகத்திலிருந்து இங்கு வந்தனர். இசைநாடகம், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டது. சுருதியும் லயமும் பாட்டுக்கு முக்கியம்.

எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், டி. ஆர். மகாலிங்கம் முதலிய இசைநாடகக் கலைஞர்கள் இங்கு வந்தனர். அவர்களது ஓய்வுவேளைகளில் எம்மவர் சிலர் அவர்களிடம் இசை பயின்றனர். பிறகு சிலர் தமிழகம் சென்று முறையாகக் கர்நாடக இசை பயின்று வந்தனர்.

இசைநாடகக் கலைஞர்கள் கட்டாயம் கர்நாடக இசையைப் பாடத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இன்று பிழையாகப் பலர் பாடுகிறார்கள்; தாங்கள் பாடுவதுதான் இசைநாடக முறையென்றும் சொல்கிறார்கள். பிழையான முறையில் ஒரு கலையை மற்றவரிற்குக் கையளிக்கக்கூடாது; தங்களால் இயலாதென்றால் விலகிவிடவேண்டும்.

நடிகமணி வைரமுத்து உயிருடன் வந்துதான் இன்று இசைநாடகத்துறையைக் காக்கவேண்டும் போலுள்ளது. இசைநாடகக் கலைஞர்கள் கர்நாடக இசைக் கலைஞர்களுடன் கலந்துரையாடி, பிழைகளைத் திருத்தவேண்டும்!


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52
TamilNet
HASH(0x556e38eeef28)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52


புதினம்
Thu, 25 Jul 2024 02:52
     இதுவரை:  25413747 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9361 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com