அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 14 October 2024

arrowமுகப்பு arrow இலக்கியம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS



  à®“வியக்கூடம்
  
  12 ஓவியம்(கள்) :: பாலமனோகரன்
ஓவியர் அண்ணாமலை பாலமனோகரன் இலங்கையில் தண்ணீரூற்று கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். நாவல் சிறுகதை கவிதை மொழிபெயாப்பு துறைகளில் பங்களித்து வருபவர். 1984ம் ஆண்டு முதல் டென்மார்க்கில் வசித்து வருகின்றார். அவரது படைப்பை முன்னிறுத்தி நிலக்கிளி பாலமனோகரன் என அழைக்கப்படுகின்றார்.
  8 ஓவியம்(கள்) :: ஜீவன்
தற்சார்பாகவே ஓவியத்தை கற்றுக்கொண்டதாக அறிவிக்கும் ஓவியர் நந்தா கந்தசாமி (ஜீவன்) யாழ்ப்பாணம் நாரந்தனையில் 1962ம் ஆண்டில் பிறந்தவர். புலம்பெயர் இலக்கிய சூழலில் வளாந்த அவரது ஓவியங்கள் பல இடங்களில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் பல்வேறு சஞ்சிகைள், தொகுப்பு மலர்களின் முகப்புகளாகவும் அவருடை ஓவியங்கள் வெளிவந்திருக்கின்றன. 'வேகமும் நெருக்குவாரமும் நிறைந்த புலம்பெயர் வாழ்வு அனுமதிக்காத கால இடைவெளிகளை தாண்டுவதற்கான சந்தர்ப்பங்களை ஒப்பீட்டளவில் கணனி எனக்கு வழங்கியது' எனக் கூறும் அவர், 'இரண்டு சகாப்பதங்களுக்கும் மேலான யுத்த அவலத்தையும் தேசம் தொலைந்து அகதியாகிப்போன வாழ்வையுமே அடிப்படையில் எனது ஓவியங்கள் பேசுகின்றன.' எனவும் கூறுகின்றார். பிரான்சில் சிறிது காலம் வாழ்நத அவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
  16 ஓவியம்(கள்) :: மாற்கு
1933ம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்த ஓவியர் மாற்கு தனது தனிச்சிறப்புமிக்க ஓவியக்கலை மூலம் ஈழத்து கலையுலகிற்கு சிறப்புகளை சேர்த்தவர். தனது ஆரம்பகால ஓவிய பயிற்சினை ஓவியர் பெனடிக்ற்றிடம் பெற்ற மாற்கு அவர்கள் பின்னர் ஓவிய டிப்ளோமா சிறப்புத் தகுதிபெற்று ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தார். தொடக்கத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பணியாற்றினார். உக்கிரமான போர்க்காலத்திலும் போரால் வாழ்க்கை சலித்து போகாதிருக்கும் படியாகவும், வாழ்தலில் நம்பிக்கை ஊட்டும் படியாகவும் புதிதாக எவற்றையேனும் வரைந்தோ செதுக்கியோ வாழ்ந்த அவர் 2000ம் ஆண்டில் மன்னாரில் காலமானார்.
  24 ஓவியம்(கள்) :: மூனா
ஓவியர் மூனாவின் ஓவியங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
  22 ஓவியம்(கள்) :: தயா
1968ல் யாழ்பாணம் நல்லூரில் பிறந்த தி.தயானந்தம் என்னும் இயற்பெயர் கொண்ட ஓவியர் தயாவின் படைப்புகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு்ள்ளன. தயா ஓவியத்தை தன்முனைப்பாகவே கற்றுத் தோந்தவர். இவர் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் தனது ஓவியக் கண்காட்சிகளை நடாத்தியுள்ளார். இந்திய தமிழ்நாட்டு அரசின் ஓவிய நுண்கலைக் கல்லூரியின் ஆர்ட் கலரியான லலித்கலா அக்காதெமியில் இவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றிருக்கின்றது. இவரது ஓவியங்கள் பாரிசிலும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைவதிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரது கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு 'காலமும் கோலமும்' என்னும் நூலாக வெளிவந்தது. சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்ட ஓவியர் தயா சஞ்சிகைகள் வடிவமைப்பது அரங்கம் வடிவமைப்பது போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார். தற்போது பாரிசில் குடும்பத்துடன் வாழும் அவர் தொடர்ந்தும் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
  14 ஓவியம்(கள்) :: கிக்கோ (Kico)
ஓவியர் "கிக்கோ"வின் ஓவியங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
  15 ஓவியம்(கள்) :: கஜானி
"வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜானிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மை வியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது." இதோ, அவருடைய ஒளிப்படங்கள் சில...
முதல் பத்துஇறுதியாக இணைக்கப்பட்டதுஇறுதியாகக் கருத்தெழுதப்பட்டது
     இதுவரை:  25864689 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 19557 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com