அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 05 May 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மா.சித்திவிநாயகம் கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மா.சித்திவிநாயகம்  
Thursday, 14 June 2007

01.

நிச்சயம்

நிச்சயிக்கப்படாத நாளில்.
நிச்சயிக்கப்படாத வேலைதேடி..
நிச்சயிக்கப்படாத முதலாளியிடம்..
நிச்சயிக்கப்படாத ஊதியம் வாங்கி..
நிச்சயமின்றி அலைகின்ற எனக்கு
நிச்சயிக்கப்பட்ட வாழ்வொன்று
இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பூணூல் தரித்த மற்றும்
தரிக்காத புனிதர்கள் !

வாழ்வை நிச்சயமெனக் கூறுகின்ற
இந்தப் புனிதர்களின் பொய் முகங்களை
நாம் நம்பித்தானாக வேண்டியிருக்கிறது.
நிச்சயிக்கப்படாததை நம்பவும்..
நிச்சயமற்றவற்றை தொழுதெழவும்
பழக்கப்பட்ட எமக்கு
வேறு மார்க்கம் தான் என்ன?
உறவு பற்றி உண்மை பற்றி நட்பு பற்றி
எனக்குள் தாறுமாறான கேள்விகள் உண்டு!
தத்துவம்பற்றி அரசியல்பற்றி நேர்மைபற்றி
எழுதியுள்ளவை யாவும் எம்மை
குழப்பிப்போடுகின்றன

குரோதமும் குதறும் பற்களும்
கொண்டே அலைகின்றன - நான்
பார்க்கும் இரண்டு கால் விலங்குகள்.
பணநோட்டைக்கூட உரசி உரசி பார்த்து
நிச்சயம் பண்ணும் உலகில்
மனிதனை உரசி  மட்டிடுகின்ற
மாயப்பொருள்  எது ?

நிச்சயிக்கப்படாத வேளையில்
நிச்சயம் பேசிய மனிதரையும்
சேர்த்தள்ளிக் காற்றில் பறக்கிற
சருகானது இவ்வாழ்வு.
                           

02.

விதி
   
மேற்கு வானத்துச் சிறையில்
ஓற்றைப் பறவையாய்
தனித்துப் போனது
அந்தக் காகம்.

வெள்ளைச் சிறுநீர்க்
கழிப்பறைகளில்-ஓர்
கறுப்பு ஆண்குறி!

அபாயச் சங்கிலி
இழுத்த போதிலும்
அவதானிப்பற்று
அலைகிறது-அது

எரிந்து போகலாம்…
குத்தப்படலாம்…
தண்டவாளக்கம்பியில்
நெரியலாம்..
கோரப்பற்களால் குதறப்படலாம்…
நீச்சல் தடாக நீருள்
மரிக்கலாம்..

எல்லா நம்பிக்கைகளும்
நம்பிக்கையிழந்த
இந்த வாழ்வு
நேற்றைய வாழ்வு போல்
இன்பகரமானதல்ல..

விதிக்கென எழுதிய
வேளையிப்போது.

இருந்தும் அது- இங்கு
இருந்துதான் ஆகவேண்டும்
சிலந்திகள் பின்னிய வலையினில்
விழுந்துதான் ஆகவேண்டும்.

மா.சித்திவிநாயகம்
(ஒரு அகதியின் டயறி)    

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)
 


     இதுவரை:  24859649 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3255 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com