அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 29 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சாரங்காவின் இரு கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சாரங்கா தயாநந்தன்  
Tuesday, 05 April 2005

1.

எவர் மீட்பார்

எவர் மீட்பார்

எழுந்தாடி
அழகு பொழிந்திருந்தாய்!
இளவான வர்ணத்தில்
இதயங் கவர்ந்திருந்தாய்!
வளங் கொண்டு மீன் வாரி
வயிறு நிறைத்திருந்தாய்!
மென்னந்திப் போதினிலே...
மிகவமைதி தேடி வந்த
தன்னந்தனி ஜோடி
தனித்த ஒரு கிழவன்;
சின்னஞ் சிறுசெல்லாம்
சீராட்ட வாழ்ந்திருந்தாய்!
பொன்கடலே!
புகழ் கொண்டாய்,
பரந்த மன மனிதர்...
பாசமிகு அன்னை...
விரிந்த கருணை...
விசாலித்த அறிவு என
அனைத்துக்கும் பொதுமையுற்று
அகிலப் புகழ் கொண்டாய்!
அது இறக்க
நேற்றுன் புதுமுகத்தை
நீசக்கடல் முகத்தை
எம் நெஞ்சில் எழுதினாய்.
வஞ்சம் மிகக் கொண்டு...
'வம்பில் பிறந்தா'ளென
வசை கொண்டாய்!
விசைகொண்டு நீயழித்த சகலமும்
திசையெங்கும் கரம் நீட்டும்
மனிதத்தில் மீட்டிடலாம்.
ஆனால் நீ...
கரைத்த உயிர்களையும்
காலக் கடலிலும்
கரைந்தழியாதென்பதாய்க்
கர்வங்கொண்டென்னைக்
களிகூரச் செய்திருந்த
என்றுங் கிழியாத
என் பாட்டையும்
நீயொழித்த ஆழ்கடல்
மடிதடவி எவர் மீட்பார்?
 
    

2.

தேடல்

தேடல்

தன் வயிற்றுக் குழந்தையின்
முக ஒப்புமையை
வளர்த்தப்பட்ட சடலங்களுள்
தாய் தேடினள்.
கன்னிப் பெண் ஒருத்தி
காதல் பரிசாய் 'அவன்' கொடுத்த
காற்சலங்கை தேடினள்.
தொங்கிய காதுகளில்
முத்துக்குவையிட்டிருந்த
மூதாட்டி
மூவாறுபவுணிலிருந்த
தன் தாலி தேடினள்.
வேலியற்ற வெளிப் பரப்பில்
நின்றுகொண்டு
'என் எல்லை எது'வென்று
ஒரு கிழவன் தேடினான்.
சின்னஞ் சிறுமியோ
தான் தாலாட்டித் தூங்கவைத்த
பொம்மை தேடினள்.
வசந்த காலத்து இரவொன்றின்
வெளிச்சமாய் ஜனித்திருந்த
என் கவிதையை
நான் தேடினேன்.
எவர்க்கும் எதுவும்
கிட்டவில்லை.
அனைத்தையும் கடல்
தன் மடிக்குள்
பத்திரப்படுத்தியிருந்தது.

 


     இதுவரை:  24838352 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 8082 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com