அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 05 May 2024

arrowமுகப்பு arrow சலனம் arrow சலனம் arrow ஈழத்திரைப்பூங்கா - மலர்ந்துவிட்டது!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்திரைப்பூங்கா - மலர்ந்துவிட்டது!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஏ.ரகுநாதன்  
Monday, 21 March 2005

1963 இல் முகம் காட்டிய ஈழத்து தமிழ் சினிமா வளைந்து - நெளிந்து - தெளிந்து, விடுதலைப்போராட்ட உணர்வுகளுடன் தாயக மண்ணில் மலர்ந்து கிடப்பது நாம் அறிந்ததே. அன்று அதாவது 1966ம் ஆண்டு காலகட்டத்தில் ஈழத்தில் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தால் வடக்கு - கிழக்கு - கொழும்பு என ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே நிறம் காட்ட முடிந்தது. ஆனால் இன்று நம்மவர் உலகமெலாம் பரந்து செறிந்து நிமிர்ந்து வாழும் சூழல் உருவாகிவிட்டது. தமிழ்நாட்டு கோடம்பாக்கமும் எங்களை நம்பியே திரைப்படங்களை தயாரிக்கும் காலமாக அமைந்துவிட்டது.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழன், என்ன செய்கிறான். உலகெலாம் தமிழ் மணக்கச் செய்கிறான். உலகெலாம் வியக்கும் வரலாற்றைப் படைத்து நிற்கிறான். உலகத்தில் நமக்கென்று ஒரு தலைமைத்துவத்துக்காகப் போராடி வெற்றிக் களத்தை நெருங்கியிருக்கிறான். ஆனால் புலம் பெயர்ந்த கலைஞர்கள், நமக்கென்று தனித்துவம் வாய்ந்த திரைப்படங்களை ஏன் உருவாக்க முன்வரவில்லை என்ற கேள்வி மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஓர் ஏக்கமாக இருந்தது. பாரிசிலும் - கனடாவிலும் - ஜேர்மனியிலும் - நோர்வேயிலும் -இங்கிலாந்திலும் அப்பப்போ முகம் காட்டிய சினிமாக்கள் இன்று முழுவேகத்துடன் தன் கால்களைப் பதித்து விட்ட நற்செய்தி, ஊடகங்கள் மூலம் பரவி செவிக்கும் மனதுக்கும் பெரு மகிழ்வைத் தருகிறது. இதோ புலம்பெயர் ஈழத் தமிழர்களால் சமீபத்தில் தயாரித்த - தயாரிப்பில் உள்ள, திரைப்படங்களை வரிசைப்படுத்துகிறேன். நமக்கென்று ஒருசினிமாவை அதுவும் நமக்கான கலாச்சாரம், பண்பாடு, தனித்துவம் பேசும் சினிமாவை வளர்த்தெடுப்போம். ஐந்தே வருடங்களில் நமது சினிமா உலகை வெல்லும் இது உறுதி.

1.'கனவுகள் நிஜமானால்' (லண்டன்)
ஈழத்தமிழரின் 'கனவுகள் நிஜமானால்' என்னும் விளம்பரத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக இத்திரைப்படம் லண்டனில் பல பகுதிகளில் மண்டபம் நிறைந்த காட்சிகளாக அரங்குகளை நிறைப்பதுடன் - பார்வையாளர்களை மனந்திறந்து பாராட்டவும் செய்துள்ளது. இப்படத்தை பார்த்து முகம் கொள்ளா மகிழ்வுடன் திரையரங்குகளை விட்டு வெளியேறும் ரசிகர்களின் மகிழ்ச்சி வெள்ளத்துடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் முழுநீளப் படமிது. இயக்குநர் புதியவனின் நெறியாள்கையில் வாசு, அகிலா, போன்ற அனுபவம் வாய்ந்த கலைஞர்களின் நடிப்பாற்றலுடன் வெற்றிப் படமாக வலம்வரும் இக் கனவுகள் நிஜமானால் திரைப்படத்தை உலகமெங்கும் திரையிட ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அந்தவகையில் பாரிசிலும் ஏப்ரல் 30 திரையிடப்படுகிறது.

2. 'பூக்கள்'  (டென்மார்க்)
இதுவும் கடந்த 2 மாதங்களாக டென்மார்க் எங்கும் திரளான மக்கள் கூட்டத்துடன் அவர்களின் உற்சாகக் குரல்களுடன் மண்டபம் நிறைந்த காட்சிகளாக காட்டப்படுகிறது. எழுத்தாளர் கே. எஸ். துரையின் நெறி யாள்கையில் தயாரான முழுநீளப் படமான பூக்கள் கிறாபிக்ஸ் காட்சிகளிலும் தன் சாதனையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இப்படமும் உலகெங்கும் காட்டப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

3. 'பேரன் பேர்த்தி' (பாரிஸ்)
புலம் பெயர்ந்த மண்னில் நம்மவர் சிலர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் இக்குறும் படத்தில் மூத்த கலைஞர் ரகுநாதனுடன் 10 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். சிந்தி- வாஹினி-யோகன் என்ற அந்தக் குழந்தை நட்சத்திரங்களுடன் பாபுவும் நடித்துள்ள இப்படம் ராஜன்-விஜயமாலாவின் ஒளிப்பதிவில்-ரவியின் தொகுப்பில்-பஷீரின் இசையுடன் நம்முடன் வாழும் திறமைமிக்க படைப்பாளர் பராவின் நெறியாள்கையில் நேபாலயம் தயாரிப்பாக ஏப்பிரல் மாதம் உலகெங்கும் வெளிவர உள்ளது.

4. 'சந்தர்ப்பம்' லண்டன்
தீபம் தொலைக்காட்சியில் தகிடதகிட நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் பதிந்துவிட்ட தொழில் நுட்பக் கலைஞர் நந்தாவின் ஆழுமையில் தயாராகியுள்ள முழுநீளப்படம் 'சந்தர்ப்பம்'. ஒரு துடிப்பான-இளைய தலைமுறையை கவரும் விதமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம் உலகெங்கும் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

5. பாரிஸ் நல்லூர் ஸ்தான் விளையாட்டு கழகத்தின் கலைப்பிரிவு நடாத்த உள்ள குறும்படப்போட்டி ஏப்ரலில் நடைபெற உள்ளது. பல இளைஞர்கள் இப்போட்டியில் பங்குபெற படங்களைத் தயாரித்து வருகிறார்கள். ஏறத்தாழ பத்து குறும்படங்கள் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. 'நீர்கோலம்' (லண்டன்)
ஈழவர் சினி ஆர்ட்ஸ் கிறியேஷன்ஸ் உரிமையாளர் திரு எஸ் ஜே.ஜோசப் நெறியாள்கையில் 'நீர்க்கோலம்" என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். பிருந்தன், வாசு, பாலேஸ்வரி, அகிலா,சண்டி-மணி ரேகன், யோகரட்னம், நவஜோதி எனப் பலரின் நடிப்பாற்றலுடன் விரைவாகத் தயாராகிவருகிறது. 'நீர்க்கோலம்"  இதுவும் ஜுன் மாதம் திரைக்குவரும்.
வளரும் ஈழவர் திரைப்பட எழுச்சியைப் பார்த்தால் 2006இல் மாதம் ஒரு படம், நம்மவர்  பார்த்துக் களிக்க  தயாராகும் போல் தெரிகின்றது. உலகெலாம் வாழும் கலைத்தாகம் கொண்டவர்கள் களம் இறங்கட்டும், ஈழத்திரைக்கலை உலகெங்கும் மலரட்டும்


கருத்துக்கணிப்பு




செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 05 May 2024 14:02
TamilNet
HASH(0x55b65d280390)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 05 May 2024 14:02


புதினம்
Sun, 05 May 2024 14:02
















     இதுவரை:  24860558 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3744 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com