அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 14 December 2025

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பிறீமன் குறும்படமாலை 2005   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: முகிலன்  
Saturday, 05 November 2005

ஜேர்மனியில் பிறீமன் தமிழ்க்கலை மன்றத்துடன்  இணைந்து சலனம் நடாத்திய 'குறும்படமாலை - 2005'  கடந்த 30.10.2005 ஞாயிற்றுக்கிழமை அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்து முடிந்தது. அதன் நிழ்ச்சி  நிரல் இரு நிகழ்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

முதலாவதாக ஜேர்மனியை வதிவிடமாகக் கொண்டு  வளர்ந்துவரும் 22அகவையுடைய அடுத்த தலைமுறை  வாலிபனான சஞ்சீவ்காந்தின் ‘உராய்வு’ கவிதைநூல்  அறிமுகம் இடம்பெற்றது.

இரண்டாவதாக சலனத்தின் குறும்படங்களாக கனடா  சுமதி ரூபனின் ‘மனமுள்’, ஈழவர் திரைக்கலைமன்றம்  வழங்கும் ஜேர்மனி கலைக்கண் பால்ராஜின் ‘கனவுகள்’,  பாரிஸ் நேயாலயம் வழங்கும் கரைஞர் பராவின் ‘பேரன்  பேத்தி’, பிரான்சு நல்லூர்ஸ்தான் வழங்கும் வதனனின்  ‘விலாசம்’, கனடா எம் சுதனின் ‘அடிட்’ ஆகியன  திரையிடப்பட்டன.
அத்துடன் புலத்தமிழர்களின் திரைக்கலை வரலாற்றில்  புதிய தடம்பதித்த ‘பேரன் பேத்தி’ குறும்படத்தின் மூலம்  அநேகரின் கவனத்தை ஈர்த்த பன்முகக்கலைஞர் பரா,  அவையின் பலத்த கரவொலிக்கு மத்தியில் பிறீமன்  தமிழ்க்கலை மன்றத்தால் ‘சிறந்த இயக்குநர் 2005’  பட்டயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நூல் அறிமுக நிகழ்வில் தமிழையும், தமிழர்  வாழ்வியலையும் சுருங்க விபரித்து அந்நதந்தக் காலப்  பதிவுகளில் அக்கறையில்லாதிருக்கும் தமிழர்களின்  அலட்சியப்போக்கை கண்டித்ததுடன், நாம் வாழும்  புலத்தில் வளரும் அடுத்த தலைமுறை இளைஞனான  சஞ்சீவ்காந்தின் இந்தப் பதிவு முயற்சியைப் பாராட்டிப்  பேசினார் புலத்தமிழர் மத்தியில் சிறந்த  சொற்பொழிவாளராகத் திகழும் கோடையிடிக் குமரன்.  இதனால் அவையிலிருந்தோரின் வாஞ்சைக்குள்ளானார்  ‘இளைஞன்’ என்ற புனைப்பெயரையுடைய சஞ்சீவ்காந்.

இவரது எளிமையான ஏற்புரையும், பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தின் புதிய தலைமுறையினருக்கான  உற்சாகமூட்டலும் கவனங்கொள்ளத் தக்கன.

பிறேமன் தமிழ்க்கலை மன்றத் தலைலவர் வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்கள் வாழ்து்துரை நிகழ்த்தினார்.



பிறேமன் தமிழ்க்கலை மன்றச் செயலாளர் இராஜன் முருகவேல் அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்தினார்.



சொற்பொழிவாளர் "செந்தமிழ்க்கோடையிடி" குமரன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார்.



இளைஞன் சஞ்சீவ்காந்த் ஏற்புரை நிகழ்த்தினார்.

 

சிந்திய கருத்துகள்

0  ‘கனவுகள் படத்தில் வந்த நெஞ்சு மயிருக்கு  மையிடும்  முதல் காட்சியால் உந்தப்பட்டு நான் எனது  நெஞ்சைக் குனிந்து பார்த்தேன்… இப்படியாக  இப்படங்கள் பார்வையார்கள் என்ற தளத்திலிருந்த  எம்மையும் பங்காளரராக உள்வாங்கிக் கிறங்கடித்தன’  என்றார் சினிமா ஆர்வலர் ராஜ்குமார்.
0  ‘இளைஞரது படம் விளங்க வில்லை என்கிறீர்களே  எது விளங்கவில்லை? விலாசமும், அடிட்டும் மிகக்  குறுகிய நேரத்தில் நேர்த்தியாகக் கதை சொல்லியுள்ளன. நல்லதோர் வீணை செய்தே.. என்றபாடலும், உமக்கென்ன தெரியும்? ஏன் வீணாக முத்திரை குத்துகிறீர்கள் என்ற  உணவக உரையாடலும் தெளிவாகப் புரிய  வைக்கவில்லையா விலாசத்தில்,
எங்கே செல்வது என்று தெரியாது சென்றுகொண்டிருந்த  போதை அடிமையான இளைஞனது வாழ்வுக்கான  திருப்பம் அவனது அம்மாவினது பொருளைக்  களவாடியதால் கிடைத்தது. அருமையாகப்  படமாக்கியிருந்தார்கள்…’ என்றார் உணர்ச்சி ததும்ப  இளைய தலைமுறையைச் சேர்ந்த பிரசன்னா.
0  ‘பேரன் பேத்தியின் நிறைவிற்குப் பிறகு  மற்றையவற்றை சீர்தூக்கி பார்க்க முடியுதில்லை.’  ஏன்றார் பெண் பார்வையாளரில் ஒருவர்.
0  ‘சொன்னதையே சொல்லும் திரைப்படைப்புகளால்  சலிப்புற்றுள்ள சூழலில் நம்மவர்கள் சொல்ல  வேண்டியதைச் சொல்லும் அரிய படைப்புகளதை;  தருவது பெருமையாகவுள்ளது’ என்றார் நயமாக  பார்வையாளர் ஒருவர்.
0  ‘என்னைப் பாராட்டுவதால் நான்  பெருமைப்படவில்லை, என்னுடன் அற்புதமாக நடித்த  அந்தச் சிறார்களின் ஆற்றலால்தான் நான் பெருமிதம்  அடைகிறேன்… அவர்களுக்கு தகுந்த ஊக்கத்தைக்  கொடுக்கவேண்டியதுதான் தற்போதைய காலக்  கடமையாகும்’ என்றார் தாத்தாவாக நடித்திருந்த மூத்த  கலைஞர் ரகுநாதன்.
இவர் போகுமிடமெல்லாம் பக்கத்தில் சிறார்கள் வந்து  உட்கார்ந்து தாத்தா என்று அழைத்ததால் நெகிழ்ந்து  போனார்.
0  ‘எங்களது திரை முயற்சிக்கு நேரேயே பாராட்டும்  புகழும் கிடைக்கும். ஆனால் எந்தப் பிரதிகூலத்தையும்  பாராமல் ஊர் ஊராகக் கொண்டு சென்று காண்பித்து  அரியபணியை ஆற்றும் சலனம் அமைப்பினருக்கு நாம்  அனைவரும் பெரும் கடன்பட்டிருக்கிறோம் என்றார்  தனது ஏற்புரையில் இயக்குநர் பரா.
0  ‘அருமையான நம்மவர் படைப்புகளின் தொகுப்பைப்  பார்த்ததால் வார்த்தைகளில்லாமல்  வாயடைத்துப்போயுள்ளோம் இதனால் அங்கு  கருத்துச்சொல்ல முடியவில்லை’ என்றார் திரும்பும்  வழியில் ஒருவர்
0  ‘ஓபர்குசனென்ன ஸ்பெயினில் நிகழ்வை ஒழுங்கு  செய்து எம்மை அழைத்தாலும் நாம் வந்து  –நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்- என்ற  நம்மவர் படைப்புகளைப் பரவலாக்கும்  பணியைத்தொடர்வோம்’ என்றார் சலனம் அமைப்பு  சார்பாக கலந்துகொண்ட முகுந்தன்.
பொறி திரையிடமுடியாமையை மனவருத்தத்துடன்  தெரியப்படுத்தினார் பிறீமன் தமிழ்க்கலை மன்றப்  பொறுப்பாளர்களில் ஒருவரான நாச்சிமார் கோவிலடி  இராஜன். இதனால் சபை எங்கும் பொறிப்பறந்து  அங்கலாய்ப்பு ஏற்ப்பட்டது.




குறும்பட நிகழ்வை முகுந்தன் நெறிப்படுத்தினார்.



நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்கள்.



குறும்படங்கள் பற்றி பர்வையாளர் கருத்துக்கள்.


ஒளிப்படங்கள் & à®’ளிப்பதிவு: நன்றி
தமிழமுதம்.net

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  27951437 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 26514 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com