21.12.2001 - 25.12.2001

September 4th, 2006

21.12.2001 வெள்ளி மாலை 4.20

மகிழ்வான நாட்களைக் கட்டிலில் கழிப்பது கொடுமை. நத்தார் விடுமுறை நாட்களைக் கட்டிலில் கழிப்பது அதனை விட மிகவும் கொடுமை . நேற்று அல்ல. அதற்கு முதல் நாள் கண் விழித்த போது தலை கனத்து தேகம் குளிர்ந்தது. மதியம் செல்லச் செல்ல விரிவுரைகளிலும் சோர்ந்திருந்தேன். காலை குளிர்ந்த தேகம் மெல்ல நடுங்கிற்று. கண்கள் எரிந்தன. மூச்சில் கூட வெப்பம் கலந்திருந்தது. “காய்ச்சல் வரப்போகுது கெதியில் வீட்டை போ” என்றனர் நண்பர்கள். வீடு வந்தேன்.என்னயே நொந்து கொண்டேன். மை தொட்டு நாலு வரி எழுதமுடியவில்லை. கட்டிலில் தூக்கிப்போட்டு வாட்டி எடுத்தது காச்சல். ஈழமுரசு அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு “இவ்வாரம் எழுத முடியாது” என்று சொன்னேன். தலையில் இருந்து கால் வரை அம்மா சோன்னதத்தையும் செய்தேன்.கொத்தமல்லி தண்ணீர் குடித்தேன்.தேசிக்காய் போட்டு நீராவி பிடித்தேன். யன்னலை இறுக்கி மூடி பனிக்காற்று என்னில் படாதபடி பார்த்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் காய்ச்சல் என்னைக் கவ்விப்பிடித்தது. இன்று மதியம் மெல்ல தொலைந்து போனதும் பாற்சொதியுடன் இடியப்பம் பிசைந்து சாப்பிட்டேன். யன்னலை திறந்துவிட்டு இப்போ உன்னுடன் பேச வந்துவிட்டேன். மனம் மகிழ்வாக இருக்கும் போதே இதனைப் பகிர்ந்தாக வேண்டும். Read the rest of this entry »

09.12.2001 - 12.12.2001

July 18th, 2006

9.12.2001 ஞாயிறு காலை 7.30

ஆழ்ந்து தூங்குகிறது ஊர். எனக்கு என்னவோ நேரத்திற்கே விழிப்பு வந்து விட்டது. கண்களை இறுக்கி மூடி புரண்டு படுத்தேன். பயனில்லை. பல் துலக்கினேன். பால் காய்ச்சி தேனீர் போட்டேன். மெல்ல வந்து என் யன்னலோரக் கதிரையில் அமர்ந்தேன். நாட்காட்டி பார்க்காமலே “இன்று ஞாயிறு” என்பேன். அத்தனை அமைதி,வெறுமை. குளிர்காலம் என்றல்ல,தேகம் சுடும் வெயில் காலங்களிலும் இந்த ஞாயிறு மேல் என்னை அறியாத ஒரு வெறுப்பு,கோபம். ஜீலியா சொல்வாள்: “ஞாயிறுக்கு உயிரில்லை”. கிழமையில் ஒரு நாள் அவ்வாறு செத்தபடி இருக்கட்டுமே. அப்படியே அதனை விட்டுவிடு.திங்கள் விடிந்ததும் தானாகவே உயிர் வந்து விடும்…” எத்தனை இலகுவாக சொல்கிறாள். அவளுக்கு ஞாயிறு செத்துப்போன ஒரு நாள். எனக்கு அப்படி இல்லையே! உயிருள்ள பல ஞாயிறுகளை நான் அனுபவித்திருக்கிறேன்! அப்போ எனக்கு ஐந்து வயது . Read the rest of this entry »

29.11.2001 - 01.12.2001

July 16th, 2006

29.11.2001 வியாழன் இரவு 9.50

கொன்று போடும் குளிர், சுட்டெரிக்கும் சூரியன், அள்ளியெறியும் புயல். ஏன்? கடி நாய், கரப்பான்பூச்சி, கூடில்லா நத்தை, புலுமைச்சிலந்தி அனைத்திற்க்கும் அஞ்சினேன்.வீட்டினுள் குடங்கி கிடந்தேன். புரண்டு புளுங்கினேன். அசையாதிருந்தேன். இவையின்றி வேறெதெற்க்கும் அஞ்சியதில்லை. அகம் நடுங்கியதில்லை. ஒரு நாள் வந்தது . ஒரு கணம் அகம் நடுங்க இரத்தம் உறைந்தது…! Read the rest of this entry »

16.11.2001 - 27.11.2001

May 28th, 2006

16.11.2001 வெள்ளி சாமம் 2.10

நள்ளிரவு மெல்லத் தேய கண்மூடினால் தெரியும் கறுப்புபோல் இருள் சூழ்கிறது. ஆழ்ந்து தூங்கும் பற்றைகளிலிருந்து பூச்சிகளின் சத்தம் மட்டும் கேட்கிறது. “இந்தச் சாமத்தில் போகப் போகிறாயா?” என்று கண்கள் விரிய கேட்டேன். “நிறைய படிக்க இருக்கு. நான் போயாக வேண்டும்” என்று சொல்லி பிறப்பட்டாள் ஜூலியா, “எனக்கு புரிகிறது. ஆனால் கவனமாகப்போ” என்று அனுப்பி வைத்தேன்.
மாலை 6.30க்கு என் வீட்டிற்க்கு வந்தவள் சாமம் இரண்டு மணிக்கு போகிறாள். வெறுமனே அவள் வரவில்லை. மலை உச்சியின் குளிர்மையை மனம் முழுதும் சுமந்து வந்தாள். வீடு முழுதும் தன் கால் பதித்தாள். மகிழ்வைத் தொற்றவைத்தாள்.வயிறு நிறைய சாப்பிட்டாள். நிறைய பேசினாள். சுழல் சுழலாக சாமம் வரை பேச்சு தொடர்ந்தது. அவள் பேசுவதை பார்க்க வேண்டும். உதடு மட்டும் அல்ல, உடலின் அனைத்தும் பேசும். புறப்படுவதற்க்கு சற்றுமுன் “ஒரு தேனீர் போட்டுத்தா நான் போகிறேன்” என்றாள். வெளிவாசல் வரை கூடச் சென்றேன். Read the rest of this entry »

09.11.2001 - 14.11.2001

May 11th, 2006

“ஓம்” என்று சொன்னாய் ஓடிவந்தேன். நாங்கு வாரங்கள் உன் கை பிடித்துப் பேசியிருக்கிறேன் இல்லையா? கண்கண் விரிய ஆச்சிரியப்படிகிறேன்.உண்மையச் சொல்கிறேன்.துயர் கவிந்தாலும் மகிழ்வு சூழ்ந்தாலும் உன்னோடு நான் பகிரும் இந்த சில நிமிடங்கள் தான் என்னை உயிர்ப்புடன் இயங்கவைக்கின்றன்.

09.11.2001 வெள்ளி இரவு 11:50

அது நிகழ்ந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. தொலைக்காட்சியும் பத்திரிக்கைச் செய்தியும் இதனையே சொல்கின்றன. “இரண்டு திகதிகள். ஒன்று சன்று துயர் தரக்கூடியது. மற்றயது மகிழ்வானது. மதில் எழும்பிய நாள் ஓகஸ்ட் 13-1961. மதில் விழுந்த நாள் நவம்பர் 9 1989″(Two dates,one dramatic ,the other a joyful occasion 13th August 1961 when the wall went up 9th November 1984 when the wall went came down”) ஓகஸ்ட் 13ம் திகதி 1961 ஜேர்மனியின் பேர்லின் (Berlin) நகரத்தை ஊடறுத்துக் கட்டப்பட்டது ஒரு மதில். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் முதல் கல் வைத்து விடியுமுன்னே, இரண்டு மனிதர்களின் உயர்த்திற்க்கு எழுந்துவிட்டது மதில்.பலர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.விழித்த போது பிளந்து கிடந்தது நகரம்.உறவுகள் உயிரோடு பிரிக்கப்பட்டன. அத்தை வீட்டில் தூங்கிய குழந்தைகள் தாயைப்பிரிந்தனர்.ஒரு கரையில் தாய் மறுகரையில் சேய், ” நாளை வருவேன் ” என்று சொல்லி சென்ற காதலன் தன் காதலியை பிரிந்தான். Read the rest of this entry »