21.12.2001 - 25.12.2001
Monday, September 4th, 200621.12.2001 வெள்ளி மாலை 4.20
மகிழ்வான நாட்களைக் கட்டிலில் கழிப்பது கொடுமை. நத்தார் விடுமுறை நாட்களைக் கட்டிலில் கழிப்பது அதனை விட மிகவும் கொடுமை . நேற்று அல்ல. அதற்கு முதல் நாள் கண் விழித்த போது தலை கனத்து தேகம் குளிர்ந்தது. மதியம் செல்லச் செல்ல விரிவுரைகளிலும் சோர்ந்திருந்தேன். காலை குளிர்ந்த தேகம் மெல்ல நடுங்கிற்று. கண்கள் எரிந்தன. மூச்சில் கூட வெப்பம் கலந்திருந்தது. “காய்ச்சல் வரப்போகுது கெதியில் வீட்டை போ” என்றனர் நண்பர்கள். வீடு வந்தேன்.என்னயே நொந்து கொண்டேன். மை தொட்டு நாலு வரி எழுதமுடியவில்லை. கட்டிலில் தூக்கிப்போட்டு வாட்டி எடுத்தது காச்சல். ஈழமுரசு அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு “இவ்வாரம் எழுத முடியாது” என்று சொன்னேன். தலையில் இருந்து கால் வரை அம்மா சோன்னதத்தையும் செய்தேன்.கொத்தமல்லி தண்ணீர் குடித்தேன்.தேசிக்காய் போட்டு நீராவி பிடித்தேன். யன்னலை இறுக்கி மூடி பனிக்காற்று என்னில் படாதபடி பார்த்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் காய்ச்சல் என்னைக் கவ்விப்பிடித்தது. இன்று மதியம் மெல்ல தொலைந்து போனதும் பாற்சொதியுடன் இடியப்பம் பிசைந்து சாப்பிட்டேன். யன்னலை திறந்துவிட்டு இப்போ உன்னுடன் பேச வந்துவிட்டேன். மனம் மகிழ்வாக இருக்கும் போதே இதனைப் பகிர்ந்தாக வேண்டும். (more…)