09.12.2001 - 12.12.2001
Tuesday, July 18th, 20069.12.2001 ஞாயிறு காலை 7.30
ஆழ்ந்து தூங்குகிறது ஊர். எனக்கு என்னவோ நேரத்திற்கே விழிப்பு வந்து விட்டது. கண்களை இறுக்கி மூடி புரண்டு படுத்தேன். பயனில்லை. பல் துலக்கினேன். பால் காய்ச்சி தேனீர் போட்டேன். மெல்ல வந்து என் யன்னலோரக் கதிரையில் அமர்ந்தேன். நாட்காட்டி பார்க்காமலே “இன்று ஞாயிறு” என்பேன். அத்தனை அமைதி,வெறுமை. குளிர்காலம் என்றல்ல,தேகம் சுடும் வெயில் காலங்களிலும் இந்த ஞாயிறு மேல் என்னை அறியாத ஒரு வெறுப்பு,கோபம். ஜீலியா சொல்வாள்: “ஞாயிறுக்கு உயிரில்லை”. கிழமையில் ஒரு நாள் அவ்வாறு செத்தபடி இருக்கட்டுமே. அப்படியே அதனை விட்டுவிடு.திங்கள் விடிந்ததும் தானாகவே உயிர் வந்து விடும்…” எத்தனை இலகுவாக சொல்கிறாள். அவளுக்கு ஞாயிறு செத்துப்போன ஒரு நாள். எனக்கு அப்படி இல்லையே! உயிருள்ள பல ஞாயிறுகளை நான் அனுபவித்திருக்கிறேன்! அப்போ எனக்கு ஐந்து வயது . (more…)