Archive for May, 2006

16.11.2001 - 27.11.2001

Sunday, May 28th, 2006

16.11.2001 வெள்ளி சாமம் 2.10

நள்ளிரவு மெல்லத் தேய கண்மூடினால் தெரியும் கறுப்புபோல் இருள் சூழ்கிறது. ஆழ்ந்து தூங்கும் பற்றைகளிலிருந்து பூச்சிகளின் சத்தம் மட்டும் கேட்கிறது. “இந்தச் சாமத்தில் போகப் போகிறாயா?” என்று கண்கள் விரிய கேட்டேன். “நிறைய படிக்க இருக்கு. நான் போயாக வேண்டும்” என்று சொல்லி பிறப்பட்டாள் ஜூலியா, “எனக்கு புரிகிறது. ஆனால் கவனமாகப்போ” என்று அனுப்பி வைத்தேன்.
மாலை 6.30க்கு என் வீட்டிற்க்கு வந்தவள் சாமம் இரண்டு மணிக்கு போகிறாள். வெறுமனே அவள் வரவில்லை. மலை உச்சியின் குளிர்மையை மனம் முழுதும் சுமந்து வந்தாள். வீடு முழுதும் தன் கால் பதித்தாள். மகிழ்வைத் தொற்றவைத்தாள்.வயிறு நிறைய சாப்பிட்டாள். நிறைய பேசினாள். சுழல் சுழலாக சாமம் வரை பேச்சு தொடர்ந்தது. அவள் பேசுவதை பார்க்க வேண்டும். உதடு மட்டும் அல்ல, உடலின் அனைத்தும் பேசும். புறப்படுவதற்க்கு சற்றுமுன் “ஒரு தேனீர் போட்டுத்தா நான் போகிறேன்” என்றாள். வெளிவாசல் வரை கூடச் சென்றேன். (more…)

09.11.2001 - 14.11.2001

Thursday, May 11th, 2006

“ஓம்” என்று சொன்னாய் ஓடிவந்தேன். நாங்கு வாரங்கள் உன் கை பிடித்துப் பேசியிருக்கிறேன் இல்லையா? கண்கண் விரிய ஆச்சிரியப்படிகிறேன்.உண்மையச் சொல்கிறேன்.துயர் கவிந்தாலும் மகிழ்வு சூழ்ந்தாலும் உன்னோடு நான் பகிரும் இந்த சில நிமிடங்கள் தான் என்னை உயிர்ப்புடன் இயங்கவைக்கின்றன்.

09.11.2001 வெள்ளி இரவு 11:50

அது நிகழ்ந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. தொலைக்காட்சியும் பத்திரிக்கைச் செய்தியும் இதனையே சொல்கின்றன. “இரண்டு திகதிகள். ஒன்று சன்று துயர் தரக்கூடியது. மற்றயது மகிழ்வானது. மதில் எழும்பிய நாள் ஓகஸ்ட் 13-1961. மதில் விழுந்த நாள் நவம்பர் 9 1989″(Two dates,one dramatic ,the other a joyful occasion 13th August 1961 when the wall went up 9th November 1984 when the wall went came down”) ஓகஸ்ட் 13ம் திகதி 1961 ஜேர்மனியின் பேர்லின் (Berlin) நகரத்தை ஊடறுத்துக் கட்டப்பட்டது ஒரு மதில். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் முதல் கல் வைத்து விடியுமுன்னே, இரண்டு மனிதர்களின் உயர்த்திற்க்கு எழுந்துவிட்டது மதில்.பலர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.விழித்த போது பிளந்து கிடந்தது நகரம்.உறவுகள் உயிரோடு பிரிக்கப்பட்டன. அத்தை வீட்டில் தூங்கிய குழந்தைகள் தாயைப்பிரிந்தனர்.ஒரு கரையில் தாய் மறுகரையில் சேய், ” நாளை வருவேன் ” என்று சொல்லி சென்ற காதலன் தன் காதலியை பிரிந்தான். (more…)