01.11.2001 - 07.11.2001
Tuesday, April 25th, 2006பனி கலந்த காற்று. புகை படிந்த வானம். நீலம் இல்லை. ஒளியும் இல்லை. குளிர் காலம் இது தானா ?
01.11.2001 வியாழன் இரவு 10:45
அர்த்தமற்று கழிந்துவிட்ட ஒரு மாலையை நினைத்து என்னையே திட்டிக் கொண்டிருந்தேன், ஆறு மணிக்கு அரசியல் கருத்தரங்கு (Podium Discussion) ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். பல்கழைக்கழகத்தின் மிகப் பெரிய அரங்கில்(Auditorium) அது நடைபெற்றது. “ஆப்கானிஸ்தான் போரில் ஏனைய நாடுகளின் பங்களிப்பு” என்ற தலைப்பில் இரண்டு பேராசிரியர்கள் மற்றும் மூன்று அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை முன் வைக்க முயன்று பாதை மாறி எங்கோ சென்றனர். (more…)