Archive for March, 2006

நேசமொழியில் பேசவிடு

Friday, March 31st, 2006

இது எப்போது நிகழ்ந்தது?

நீண்டகாலமாக மனதில் ஒன்று அமர்ந்து விட்டது. இப்போ சில நாட்களாக ஆழவேரூன்றி அதிகம் குழப்புகிறது. குடைகிறது. இனி இயலாது என்கிறது மனம். ஏதோ அனைத்தையும் உனக்கு சொல்லவேண்டும் போல அனைத்தையும் உன்னோடு பகிரவேண்டும் போல…

நிலவோட உறங்கி
நிழலோரம் உலவியது
கடலோரம் கால் நனைந்து
காற்றோடு கதை பேசியது..

இவை பற்றியெலலாம் உன்னோடு என்னை கொஞ்சம் பேசவிடு! கொஞ்சம் இல்லை! நிறைய பேசவிடு. நிலவும், நிழலும், கடலும், காற்றும் மட்டுமில்லை. என் கைகள் இரண்டையும் இரு புறமும் அகல விரித்துக் காட்டுகிறேன்; அவ்வளவு பேச வேண்டும். கண்விழித்து கண் அயரும் வரை பேசவிடு! அத்தனையுமா என்று கேட்கிறாயா? புன்னகையுடன் தலையசைக்கிறேன். இப்போ ஒரு கதை செல்லிறேன். கேட்கிறாய் தானே? (more…)