அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow யாவரும் அறிவது arrow `ஈழத்துக் கவிதைகள்' நூல் வெளியீடு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


`ஈழத்துக் கவிதைகள்' நூல் வெளியீடு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தினக்குரல்  
Thursday, 04 January 2007

பூபாலசிங்கம் புத்தகசாலையின் `ஈழத்துக் கவிதைகள்' நூல் வெளியீடு
 
[02 - January - 2007]
 
பூபாலசிங்கம் புத்தகசாலையின் வைரவிழா ஞாபகார்த்தமாகத் தமிழ் நாட்டில் பதிப்பிக்கப்பெற்றுள்ள "இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்" எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
138 ஈழத்துக் கவிஞர்களுடைய தரமான கவிதைகளை உள்ளடக்கியுள்ள இத் தொகுப்பு நூலின் வெளியீடு கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சி.தில்லைநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இத் தொகுப்பு நூலுக்கான கவிதைகள் அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் கவிஞர்களிடமிருந்து கோரப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அமரர்களாகியுள்ள ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களது பிரபலமான கவிதைகளும் இணைக்கப் பெற்றுள்ளன. சிறிஜெயவர்த்தனபுர விரிவுரையாளரும் கம்பன் கழக அமைப்பாளருமாகிய சிறி.பிரசாந்தனால் தொகுக்கப்பெற்றுள்ள இந்நூலில் 207 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இருபதாம் நூற்றாண்டுக் கவிதையியல் குறித்த ஆய்வும் பின்னிணைப்பாகத் தொகுக்கப் பெற்றுள்ளது.

13 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ரி.கருணாகரனின் கடவுள் வாழ்த்தோடு ஆரம்பமாகும் வெளியீட்டு விழாவை கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் குமாரசாமி சோமசுந்தரம் தம்பதியர் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கவுள்ளனர். மல்லிகையாசிரியர் டொமினிக் ஜீவாவின் வாழ்த்துரையைத் தொடர்ந்து கவிதைத் தொகுப்பினை மூத்த கவிஞர் மு.பொன்னம்பலம் வெளியிட்டு வைக்க மஹாகவியின் மகளும் கவிஞருமான திருமதி ஔவை விக்னேஸ்வரன் முதற்பிரதியைப் பெற்றுக் கொள்ளவுள்ளார். கவிஞர்களான என்.ஆத்மா, சிதம்பரப்பிள்ளை சிவகுமார் ஆகியோர் நூல் விமர்சனவுரைகளை ஆற்றவுள்ளனர். நிறைவில் நூலின் தொகுப்பாசிரியர் ஷ்ரீ.பிரசாந்தன் பதிலுரை ஆற்றுவார்.

ஈழத்து இலக்கியத்துறையோடு நீண்ட காலமாகப் பெரிதும் தொடர்புபட்டு வந்துள்ள பூபாலசிங்கம் புத்தகசாலை தனது 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தமிழ் நாடு `கவிதா பதிப்பகத்தினூடு' வெளியிட்டிருக்கும் இந்த நூலை 2007 ஆம் ஆண்டு அமுதவிழாக்காணும் ஈழத்துப் பெருங்கவிஞர் மஹாகவி உருத்திரமூர்த்திக்குச் சமர்ப்பித்து மகிழ்ச்சியடைவதாக பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூ.சிறீதர்சிங் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து இலக்கிய ஆர்வலர்களையும் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Apr 2024 10:57
TamilNet
HASH(0x558affae3258)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Apr 2024 10:57


புதினம்
Thu, 25 Apr 2024 10:57
















     இதுவரை:  24804909 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5041 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com