அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow பிரான்சில் இலங்கையரின் தொழில் நடத்தைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பிரான்சில் இலங்கையரின் தொழில் நடத்தைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பாலன்குட்டி  
Monday, 21 June 2004

பிரான்சின் தொழில் துறைகளில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் உரிய பதிவுகள் இன்றி வேலை செய்வதையும் வேலை வழங்குவதையும் தடுத்து நிறுத்துவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானத்திருக்கிறது. இதனை பிரான்சின் தொழிலமைச்சர் ஜான் லுவி போர்லோ (Jean-Louis Borloo) à®•à®Ÿà®¨à¯à®¤ வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

பிரான்ஸ் அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பீட்டை ஏற்படுத்தும் இந்தச் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு எதிரான போர் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாயும் அவர் அறிவித்திருக்கிறார்.
இலங்கையர்களின் தொழில் நிறுவனங்கள் பிரான்ஸ் மண்ணில் ஆட்களுக்கு வேலை வழங்கும்போது அவை பிரான்சின் தொழில் சட்டங்களைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமேயன்றி ஸ்ரீலங்காவின் தொழில் சட்டங்களை இங்கு கடைப்பிடிக்கக் கூடாது என்றும்  அவர் உதாரணம் காட்டியிருக்கிறார்.

இந்த சட்டத்துக்குப்புறம்பான தொழில் வழங்கல் நடவடிக்கையால் வருடத்துக்கு (55மில்லியார்ட்) அதாவது 5500 கோடி யூரோ இழப்பீடு எற்படுவதாக குறிப்பிட்ட பிரான்சின் தொழிலமைச்சர் ஜான் லுவி போர்லோ தற்போது பாரிய நிதிநெருக்டியில் சிக்கியிருக்கும் சமூக சேவை நிறுவனமான அரச மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திற்கு எற்பட்ட நட்டத்தில் மூன்றில் ஒருபங்கு இந்தச் சட்டவிரோத வேலை வழங்கலாலேயே ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

முதலில் கட்டிடத்தொழில் மற்றும் பொதுப் பராமரிப்புச் சார்ந்த தொழிற் துறைகள், கபே பார்கள் உணவு விடுதிகள் தங்கும்விடுதிகள் சார்ந்த தொழில் துறைகள் விவசாயம் சார்ந்த தொழில்துறைகள், கலை கலாச்சார அமைப்புகள் சார்ந்த தொழிற் துறைகள் என்ற நான்கு பாரிய துறைகளில் கண்காணிப்பு பணிகள் மெற்கொள்ளப்படும் என்றும் இந்த துறைகளில் தான் அதிகளவுக்கு  சட்டவிரோத வேலை வழங்கல்கள் இடம்பெறுவதாகவும் குறிப்பாக கட்டிடத்தொழில் மற்றும் உணவுவிடுதி தங்கும் விடுதி தொழிற்துறைகளில் 40 வீதமான மோசடிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாக தொழில் வழங்கும் நிறுவனங்களுக்கான அரசாங்க சலுகைகளை நிறுத்துவதுடன் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வருடச் சிறைத் தண்டனையும் 35ஆயிரம் யூரோ அபராதமும் விதிப்பதென்று பிரான்ஸ் அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.சட்டவிரோதமாக தொழில் வழங்குபவருக்கு மட்டும்மல்லாது தொழில் செய்பவருக்கும் இந்தத் தண்டனை வழங்கப்படவுள்ளது. அண்மைக் காலமாக பிரான்சின் தொழிற்துறைக் கண்காணிப்பு அமைப்புக்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் வேறும் சில மோசடி நடிவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிலர் தமது தேவைகளுக்காக அமைப்புக்கள் அல்லது நிறவனங்களை உருவாக்கிவிட்டு தேவை முடிந்ததும் அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய கொடுப்பனவுகளை செலுத்தாமல் பொய்யான நட்டக்கணக்குக்களைக் காட்டி தமது நிறுவனத்தை மூடிவிடுவது, இவ்வாறான நிறுவனங்களில் போலியான சம்பளப்பட்டியல்களை தயாரித்து  மோசடியான முறையில் வேலை இழப்பீட்டுத் தொகையை பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்சின் தொழில் அமைச்சு இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் தொடர்பான போதுமான ஆதாரங்களை வைத்துக்கொண்டே செயலில் இறங்குவதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வேலை மோசடிக்கு எதிரான இந்தப் புதிய நடிவடிக்கையின் பெறுபேறுகள் தொடர்பான முதலாவது அறிக்கை அடுத்து  மாதகாலத்துக்குள் வெளியிடப்படும் என்று பிரான்சின் தொழிலமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

*பாரிஸ் 20.06.2004


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 08:18
TamilNet
HASH(0x55b10d90f008)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 08:18


புதினம்
Fri, 29 Mar 2024 08:18
















     இதுவரை:  24715498 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4278 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com