அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 23 arrow பொங்கல் திருநாள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பொங்கல் திருநாள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: முகிலன்  
Friday, 13 January 2006

புலம் பெயர்வாழ்வில் நான் யார்? –என்ற கேள்வி எம்மால் விட்டுச் செல்லும் புதிய தலைமுறையினரை அரித்தெடுக்கும் பிரதான வினாவாகவிருக்கும். நாம் வாழும் பல்லினக் குழுமங்களுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு முகங்கொடுத்தவாறே நடமாடப்போகிறார்கள் எமது சந்ததியினர். இந்த இலத்திரனியல் - இணையத் தொடர்பூடக யுகத்தில் தெளிவான கருத்தாடல்களைக் கொண்டவர்களாலேயே நிமிர்ந்து உறவாடல் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாது, எம்மை ஏனைய சமூகத்தவர் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்குண்டு.

கலை- கலாச்சார நிகழ்வுகள் இத்தகைய புரிதல்களுக்கு இதமாக இசைவாகின்றன. இவை,
1.குடும்ப நிகழ்வுகள் (பிறந்தநாள், மணநாள், இன்ன பிற)
2.பொது நிகழ்வுகள் (சங்கங்கள்- அமைப்புகளின் ஆண்டுவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இன்ன பிற)

இதில் தமிழால் ஒன்றுபடக்கூடியதான குறைந்த பட்ச நிலையிலுள்ள நிகழ்வாகத் தெரியப்படக்கூடியது பொங்கல் நாளாகும். இந்நாள் வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருக்கிறது. இந்நாளுக்கும் மதத்திற்கும் சம்பந்தங்கள் ஏதுமில்லை. தமிழர்கள் கூடும் இடமெல்லாம் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பது சாதாரண நிகழ்வு. அப்படியிருக்கும்போது தை முதலாம் நாளை ஏன் பொங்கல் நாளாகக்குறித்தான் தமிழன்? இந்நாளில் வாழ்வு இயங்கியல் நியதியான ‘பழையன களைந்து புதியன புகல்’ வழமையையும், வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ - வாசகப் பிரயோகமும் ஏன் தொடர்கின்றன ? தமிழுடன் கூடிய வீர விளையாட்டுகளும், மனிதனுடன் இணைந்துள்ள மிருகங்களுடன் அன்பைப் பொழியும் - தன்வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசித்த இந்த விழுமியம் எம்மிடம் காணப்படும் வரலாற்றுப் பொக்கிசம். இந்த உயரிய பண்பாலேயே இந்நிகழ்வு குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது.

இதனால்தான் கூறுபட்டுக்கிடக்கும் தமிழ்ப்பேசும் மக்களது நெஞ்கங்களில் பதிவுற்றிருக்கும் தமிழின் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் நாளாகவும் - தமிழர்களின் புத்தாண்டாகவும் தமிழ் அறிஞர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக மிகத்தெளிவாக தமிழுக்காக ஒரு நாள் இருக்கிறதென்றால் அது தமிழர் திருநாள் - பொங்கல் நாளாகும். இன்று பிரதேசங்களால் – நாடுகளால் – மதங்களால் - சாதியங்களால் எனப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடிய நாள் இந்தப் பொங்கல் நாள்.

அமெரிக்காவிற்கு பெயர்ந்த கறுப்பர்கள் தங்களது அடையாளத் தேடலில் பத்து நாட்களைக் கொண்ட பெரிய அடையாள மீட்புக் கலாச்சார ஒன்றுகூடலை நடைமுறைப்படுத்துகிறார்கள். உலகமெங்கும் விரவியுள்ள சீனர்கள் தங்களுக்கான தனித்துவமிக்க புதுவருட நிழ்வை எல்லோரும் அறியச் செய்துள்ளார்கள். இவ்வேளையில் இங்குள்ள சிறப்பு பல்பொருளங்காடிகள் சீன வாரத்தைக் கொண்டாடுவதைக்காண்கிறோம். இந்த வகையில் நாமும் தமிழ் வாரத்தை (பொங்கல் தினம் வரும்) வருடம்தோறும் பிரகடனப்படுத்தி தமிழர் திருநாளை அடையாள தினமாக்க வேண்டும். இதற்கு உலகளாவிய தமிழாவலர்களும், தமிழ்த் தாராளர்களும் இவர்களை ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பாளர்களும் களமிறங்கிடும் தருணமிது.

காலங்கள் கரைய ஐரோப்பாவிலும், அமெரிக்க-  அவுஸ்திரேலியக் கண்டங்களிலும் புதிய ஒன்றுகூடலை  நிகழ்த்தத் தொடங்கி உலகத்தின் பார்வையைப்  பெறவைத்தவர்கள் புலம்பெயர் ஈழத்தமிழர். இதில் இன்றைய  புதிய கலாச்சாரமாகியுள்ள 'மாவீரர் தினம்' முக்கிய சான்றாகும்.  வீரமறவர்களை வணங்கும் தமிழர்களின் தொல்மரபை மீண்டும்  தொடரத்தொடங்கியது தமிழரின் முதுகெலும்பு நிமிரும்  படிமுறையாகியது. இதன் தொடராக மூலத்தேடலும்  புத்துயிர்பூட்டலுமான சுயஅடையாளத்தை தக்கவைக்கும்  நிகழ்வுகள் இணையத்தொடங்கின.

பிரதேச மற்றும் மத நிகழ்வுகளாகவும், சடங்குகளாகவும் குறுகிப்  பிளவுண்டுள்ள தமிழர்களுக்கு தமிழால் ஒன்றிணையும் முக்கிய  நிகழ்வாவது ‘தமிழர் திருநாள்’ எனப்படும் தைப்பொங்கல்  தினமாகும். இரண்டாவது தமிழரின் வீரமரபைப் பேணும்  நிகழ்வாக அமையும் ஆடிப்பிறப்பாகும்.. இதையொட்டி உலகெங்கிலும் ஆரோக்கிய விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறுவதையும் காண்கிறோம்.

தமிழர்களின் தனிப்பெரும் நாளும், தமிழால் ஒன்றுபடும் நாளுமாகிய தைப்பொங்கல் நாள் - தமிழர் நாள் - ஒன்றுகூடலை பிரமாண்டமாக ஒருங்கிணைத்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பெற்றோர் இல்லாதவன் அனாதை - சுயஅடையாளத்தை இழக்கும் இனம் முகமற்ற மனிதக் கூட்டம் போன்றது. எமக்குப் பின்னான தலைமுறையினரின் மூலத்தேடலுக்கு நாம் விட்டுச் செல்லவேண்டியவை பலவுண்டு.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Jul 2024 21:36
TamilNet
HASH(0x55ea404bad30)
Sri Lanka: English version not available