எழுதியவர்: த. மலர்ச்செல்வன்
|
|
|
Monday, 21 March 2005

“................................” என்னால்ரெண்டு முகம் அணிய முடியாது. உன் வல்லபத்தைப் பயின்று என்னுடைய வாழ்வு ஓடவேண்டுமா?
“வெளியில் ஒருமுகம்” “வீட்டினுள் ஒருமுகம்” “சே.........” உன் வார்த்தையைக்கேட்டு காறித்துப்புகின்றேன்
காலவெளியில் சுருண்டுபோன நீ, திராணியற்றுப் - பதுங்குகின்ற கோழை.
திமிர்கொண்டெழுகின்ற காலத்தீயில் புணருகின்ற ஆணலையும் பெண்ணலையும் மிதித்தெழுகின்ற என் நதிப்படுக்கையில்
முகமணியச்சொல்கிறாய் - என்னை. எப்படித்தகும்?
வாழ்வின் பறவை ரெக்கைகட்டிப் பறக்கும் என் வான்பரப்பில். போலி முகத்தையணிந்து நான்வாழேன்.
என்முகம் நெற்றிபெருத்து கண்களிரண்டும் சிறுத்து மூக்கும் முழியுமாய் கூரெனக்குத்தும் சிவந்த முகம்.
பச்சையப்பி “................” புணர் மாமிசத்திற்காய் நாழிகை தோறும் நடிப்பு வெற்றிகொள்ள... காலம் உனக்கு கருணைகாட்டட்டும்...! |