அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 7 arrow ஈழத்து மஹாகவி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்து மஹாகவி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சோ.பத்மநாதன்  
Sunday, 13 March 2005

“கேடுற்றவரிடையே கெட்டழியா தென்னிடமே
 à®Žà®žà¯à®šà®¿à®•à¯ கிடக்கின்ற இன்தமிழ் இவ்வென்பாக்கள்
 à®Žà®©à¯à®±à¯ˆà®•à¯ கொருநாளோ எத்திசையையும் வெல்லும்!;”

மகாகவிஎன்ற பிரகடனத்துடன் கவிதை உலகில் நுழைந்தவர் 'மஹாகவி'. ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் அடையாளமாகிய பேச்சோசையை முதன்மைப்படுத்தியவர் என்ற வகையிலும், பாநாடகம் வில்லுப்பாட்டு ஆகிய துறைகளிலும் தம்முத்திரையைப் பொறித்த சாதனையாளர் என்ற வகையிலும் மஹாகவி வகிக்கும் இடம் முக்கியமானது.

மஹாகவி பிறந்தது அளவெட்டியில்.  அளவெட்டி, அம்பனை, பன்னாலை, விழிசிட்டி, மயிலங்கூடல், மாவிட்டபுரம், வீமன்காமம் முதலிய கிராமங்கள் விவசாயத்துக்குப் பேர்போனவை.

 â€œà®…ம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றில்
  கொம்புலுப்பிப் பூக்களினைக் கொட்டும் குடைவாகை”

 
இயற்கையோடியைந்த எளிமையான இம்மக்களை - அவர்கள் பண்பாட்டை - மஹாகவி நேசித்தார்.

 â€œà®¨à®¾à®³à¯ முழுதும் பாடுபடுவார்கள் - ஓயார்
  நன்றுபுரி வார், இரங்கு வார்கள்
  ஆள் புதியன் ஆனாலும்
  ஆதரிப்பர் போய் உதவுவார்கள் - ஊரார்கள்”


என்று ரசிப்பார் அவர்.

இந்தக்கிராமங்கள் கோயில்களுக்கும் புராணபடனத்துக்கும் பேர்பெற்றவை. குறிப்பாக அளவெட்டி நாதஸ்வர - தவில் கலைஞர்கள், வாழ்ந்த - வாழ்கின்ற ஊர். இந்தக்கலைகளின் செல்வாக்கை மஹாகவியின் ஆளுமையில் - குறிப்பாக 'கோடை'யில் - காணலாம்.

ஈழமண்டலத்தின் எழிலைப்பாடிய பழந்தமிழ் புலவர்போல, மஹாகவியும் -

 â€œà®šà®™à¯à®•à¯à®•à®³à¯ முழங்கமுத் தெறிந்திடும் கடற்கரையில்
  நங்கையர் நடந்தவை உதைந்திடும் சதங்கைஒலி
  பொங்கும்உட லங்கள்தர ளங்களில் நடம்பயிலச்
  செங்கைவளை யல்களோடு கிண்கிணிகு லுங்குவன
  à®ˆà®´à®¨à®¾à®Ÿà¯‡ - எழில் - சூழும் நாடே”


என்று பாடுகிறார். ஓசையை - லயத்தை - இந்த அளவுக்கு முதன்மைப்படுத்திய ஒருவரை நம் மகாகவியாக ஏற்றுக்கொண்டு, கவிதைக்கும் ஓசைக்கும் விவாகரத்துச் செய்யமுனைவது முரண்நகையாகத் தோன்றவில்லையா?

மஹாகவி கவிதை எழுதத்தொடங்கிய காலத்தில் பாரதி, பாரதிதாசன் ஆகியோரே இளங்கவிஞர்களுக்கு 'மாதிரி'களாக விளங்கினர். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஏனைய ஈழத்து எழுத்தாளர்களைப்போல் மஹாகவியும் இவ்வீர்ப்புகளுக்கு ஆளாகியிருந்தாலும், விரைவில் அவர் தமக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டார்.

 â€œà®‡à®©à¯à®©à®µà¯ˆà®¤à®¾à®®à¯ கவியெழுத
  ஏற்ற பொருள் என்று பிறர்
  சொன்னவற்றை நீர் திருப்பிச்
  சொல்லாதீர்!
  சோலை, கடல், மின்னல், முகில், தென்றலினை
  மறவுங்கள், மீந்திருக்கும்
  இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
  என்பவற்றைப் பாடுங்கள்!”


என்ற தெளிவு அவருக்கிருந்தது.

'ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்' என்ற அவரின் காவியம், யாழ்ப்பாணத்து மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சாமானியனான வேலுப்பிள்ளையின் கதை. பிறப்பு, இளமை, வாலிபம், பாலுறவு, முதுமை, இறப்பு - இவற்றின் ஊடு வாழ்வியக்கம் பற்றியதோர் அற்புதமானதரிசனம் அது. பாரதி தன் சுயசரிதைக்குப் பயன்படுத்திய கட்டளைக் கலிப்பா யாப்பில் ஆற்றொழுக்காக கதை சொல்கிறார் மஹாகவி.

'கோடை' பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றில், ஒரு நாயனக்காரர் வீட்டில் நிகழும் கதை. அந்நியர் ஆட்சிக்கு எதிராக நீறுபூத்த நெருப்பாக இருக்கும் புழுக்கம், நம் கலை, பண்பாடுகளின் மீதுள்ள பற்றுதல் இந்நாடகத்தில் இழையோடும். 'கோடை'
என்பதே ஒரு குறியீடுதான். “வெளிநாட்டார் ஆட்சி விளைத்த ஒரு கோடை”. அவ்வறட்சியிலும் அற்புதமான கலை பிரவகிக்கிறது.

 â€œà®¨à®¿à®©à¯à®±à®¨à¯à®¤à®•à¯ கோயில் நிமிர்ந்து நெடுந்தூரம்
  பார்த்துப் பயன்கள் விளைக்கின்ற கோபுரமும்
  வேர்த்துக் கலைஞர் விளைத்தமணிமண்டபமும்
  வீதிகளும் நூறு விளக்கும் பரதத்தின்
  சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறுபாதம்
  ஆடும் அரங்கும்ää அறிந்து சுவைஞர்கள்
  நாடிப் புகுந்து நயந்திட நீ சோமனுடன்
  ஊதும் குழலில் உயிர்பெற்றுடல் புளகித்து
  ஆதி அறையில் அமரும் கடவுளுமாய்
  என்றோ ஒருநாள் எழும்பும், இருந்துபார்!”

இந்த நம்பிக்கையோடு நிறைவு பெறுகிறது 'கோடை'.

மிகப்பிரபலமான 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு'ம் இந்த நம்பிக்கையை அழுத்தமாகப் புலப்படுத்துவதே. கலட்டைக் கழனியாக்கும் யாழ்ப்பாணத்து விவசாயி. அவனுக்கு ஏற்படும் சோதனைகள்: வான் பொய்த்து வஞ்சிக்கும் அல்லது சோனாவாரியாய்ப் பொழிந்து பயிரை அழிக்கும்! எது நேர்ந்தாலும்,

 â€œà®“யா வலக்கரத்தில் மண்வெட்டி பற்றி   
  அதோபார், பழையபடி கிண்டுகிறான்!”
  அதுதான் 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு!'


சாதிப்பிரிவினைக்கெதிராக மஹாகவி எழுதிய 'தேரும் திங்களும்' ஓர் அற்புதமான கவிதை. ஒரு சம்பவத்தைக் கட்புல, செவிப்புல படிமங்கள் மூலம் சித்திரிப்பதில் உச்சத்தைத் தொடுகிறது இது. மனிதன் சந்திரனில் இறங்கிய சாதனைக்கும் ஆலயப்பிரவேச முயற்சியில் “மல்லொன்று நேர்ந்து மனிசர் கொலையுண்டு” போகும் சிறுமைக்கும் மஹாகவி போடும் முடிச்சு அவர் மேதாவிலாசத்துக்கு எடுத்துக்காட்டு.

குறும்பா வேடிக்கைக் கவியாக இருந்தாலும், சமூகத்தின் - தனி மனிதர்களின் - பலவீனங்களை எள்ளற்சுவையோடு வெளிக்கொணர்வது. பணம்படைத்திருந்தும் 'கஞ்சப்பிரபு'வாய் வாழும் ஒருவரைக் காட்டுகிறார் நம் கவிஞர். அதிகம் நடந்தால் காற்செருப்புத்தேயும் என்பது கஞ்சனுடைய சித்தாந்தம்.

 â€œà®®à¯à®¨à¯à®¤à®²à®¿à®²à¯‡ வாழ்கின்ற தேவர்
  à®®à¯à®´à¯à®¤à¯à®¤à¯Šà®´à®¿à®²à¯à®•à¯à®•à¯à®®à¯ முதலாளி யாவர்
  இந்தவிலை விற்கிறதே
  à®à®©à¯à®šà¯†à®°à¯à®ªà¯à®ªà¯ˆà®¤à¯ தேய்ப்பான் என்(று)
  அந்தரத்தில் தான்நடந்து போவர்!”

தற்புதுமை (Originality) என்பது ஒரு மகாகவியின் முத்திரை. நம் கவிஞர் பல தற்புதுமையான உவமைகளைக் கையாண்டுள்ளார்.

 â€œà®•à¯‹à®ªà¯à®ªà®¿à®•à¯à®•à¯à®³à¯ பாலையள்ளிக்
  à®•à¯Šà®Ÿà¯à®Ÿà®¿à®©à®¾à®±à¯ போலிருட்டைச்
  சாப்பிட்ட கிழக்குவானம்
  à®šà®°à®¿à®¯à®¾à®• வெளுக்க....”

 â€œà®•à®¾à®Ÿà¯à®Ÿà¯†à®°à¯à®®à¯ˆ காலடியில் பட்ட  à®¤à®³à®¿à®°à¯à®ªà¯‹à®²
  நீட்டுரயிலில் எறும்பு நெரிந்தது போல்   
  பூட்டாநம் வீட்டில் பொருள்போல நீமறைந்தாய்”
  (புள்ளி அளவில் ஒரு பூச்சி)
 
 â€œà®¨à®Ÿà¯à®Ÿà®¿à®°à¯à®¨à¯à®¤ கைகாட்டி மரத்தில் ஒரு      à®•à®©à®¿à®®à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ காயாகிற்று....”

 â€œà®¨à¯†à®±à¯à®•à¯à®µà®¿à®¤à¯à®¤à®¤à¯ போல் உயர்ந்தொருபுது
  à®¨à¯†à®Ÿà¯à®¨à¯à®¤à¯‡à®°à¯â€


இவை வேறெந்தக் கவிஞனும் எடுத்தாளாத புது உவமைகள் - பிரயோகங்கள்.

அநாயாசமான வெளிப்பாட்டுத் திறன் மஹாகவியின் கலையாக்கத்தின் பிரதான அம்சமாகும். தான் சொல்லவரும் செய்தியை எந்தப் பாவடிவத்துக்குள்ளும் மடக்கிக்கொண்டுவர அவரால் முடியும். மிகையான ஒரு (வெற்று) சொல்லோ, அசையோ அவர் பாட்டில் வராது.
தமிழ்க்கவிதை மரபில் அவர் அமைத்த சிகரம் அது.

 â€œà®šà®Ÿà¯ˆ இருந்து மலர் சரிய மென்குதிகள்
  à®šà®®à¯ˆà®¯à®²à¯ உள்ளினிடை திரியவும்
  இடைஇடைஞ்சல்படும் எனினும்
  இன்கணவர்
  à®‡à®©à®¿à®µà®°à¯à®¨à¯ தருணம் எனவிரைந்து
  உடைகசங்கிடவும் உலையில்
  வெண்தரளம்
  à®‰à®µà®•à¯ˆ யோடுமிடு பாவையீர்!”

 â€œà®µà¯†à®±à¯à®µà®¾à®© வெளிமீது மழைவந்து சீறும்
  à®µà¯†à®±à®¿à®•à¯Šà®£à¯à®Ÿ புயல்நின்று கரகங்கள்
  ஆடும்
  நெறிமாறு படநூறு சுழிவந்து சூழும்
  à®¨à®¿à®²à¯ˆà®¯à®¾à®© தரைநீரில் இலைபோல்
  ஈ டாடும்
  சிறுநண்டு கடல்மீது படமொன்று கீறும்
  à®šà®¿à®²à®µà¯‡à®³à¯ˆ இதைவந்து கடல்
  கொண்டுபோகும்”

 â€œà®ªà¯‡à®°à®©à¯à®ª ஒன்றும் பெரிதாய் எழுதவில்லை    à®šà¯‡à®°à®©à¯ பிறந்த செருக்கு”
 

இவை சில உதாரணங்கள். தமிழ்க் கவிதைக்குரிய ஓசையில் மஹாகவிக்கிருந்த பிடிமானத்தைக் காட்டப் போதுமானவை. அந்த மரபையே அவர் காதலித்தார். அவர் புதுக்கவிதை எழுதவில்லை. தவறு. ஒரேயொரு புதுக்கவிதை எழுதினார், அதன் தலைப்பு 'சேரன்'. 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Apr 2024 12:58
TamilNet
HASH(0x5603a86274d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Apr 2024 12:58


புதினம்
Thu, 25 Apr 2024 12:58
















     இதுவரை:  24805236 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4901 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com