அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 7 arrow நம்மைப்பற்றி நாலு பேர்...
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நம்மைப்பற்றி நாலு பேர்...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Sunday, 13 March 2005

'எமது கலை - இலக்கியச் சூழல்பற்றித் தாங்கள்  என்ன கருதுகிறீர்கள்?'
 
கலை வாழ்நிலை அனுபவத்தினால் தோற்றம் பெறுவது. எமது வாழ்நிலை அனுபவத்தின் காரணத்தினால் எமக்குள் நெருடும் - பின் பிரசவிக்கப்படும் - ஓர் உன்னதமான விளைபொருள் கலை. ஒரு நேர்த்தியான கலையின் தோற்றத்திற்கு அறிவின் தொழிற்பாட்டுடனும், கலை நுணுக்கத்துடனும் வெளிக்கொண்டுவரும் மனநிலை அவசியமாகின்றது. அந்த மனநிலை இன்னொருவரின் சாயல்களிலிருந்து விடுபட்டு எமக்கான தனித்தன்மையுடன் இயங்க உதவியாக இருக்கும்.

இந்த நிலைப்பாடானது இன்று ஒருசில படைப்பாளிகளிடம் மட்டும் காணப்படுவதாக எண்ணுகின்றேன். இளம் படைப்பாளிகள் பலர், தாம் முக்கியமானவராய்க் கருதும் முன்னைய படைப்பாளிகளின் சாயல்களினைத் தாமும் எடுத்துக்கொள்ள முனைகின்றனர்.

அதிலிருந்து விடுபடுவதற்குரிய எந்த எத்தனங்களையும் எடுத்துக்கொள்ளாமல், எமது வாராந்தப் பத்திரிகைகள் தரும் போலி இலக்கியங்களை நம்பித் தம்மையும் அவற்றில் உள் நுழைத்துக்கொள்கின்றனர். ஆனாலும் நம்பிக்கை தரக்கூடிய படைப்பாளிகள் இல்லையென்றில்லை, அவர்களில் பலர் இப்போது எழுதுவதில்லை.

எமது நிலத்தில் பெரும்பாலான படைப்பாளிகள் போர்க்காலப் படைப்பாளிகளாகவே இருக்கின்றனர். அதனால்தான் இந்தப் போர்நிறுத்த காலத்தில் கலை இலக்கியத்தில் ஒரு மந்தநிலைமை காணப்படுவதாக, நான் கருதுகின்றேன். நல்ல கலை இலக்கிய ரசனைமிக்க படைப்புகளினை - நல்ல படைப்பாளிகளினை - அறிமுகப்படுத்த எமது சூழலிலுள்ள சஞ்சிகைகள், வாராந்தப் பத்திரிகைகள் பலவும் தவறிவிட்டதாகவே நான் எண்ணுகின்றேன்.

- தானா விஷ்ணு
  'தவிர' - ஆசிரியர்



கலை இலக்கியத் துறையுடன் தங்களை இணைத்துக்கொண்ட ஒருசிலர்தான் உன்னதமான படைப்புகளை உருவாக்குவதற்கான ஆர்வமும் தேடலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இப்போதிருக்கின்ற 'அளவு' அல்லது 'வளர்ச்சி'யுடன் திருப்திப்பட்டுக்கொண்டு ஒருவித தேக்கநிலையிலேயே இருக்கிறார்கள். கலை, இலக்கியங்களை பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வெறும் சூத்திரப்பாங்காகக் கற்பிக்கும் செயன்முறை மூலம், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் வெறும் சராசரிகளாக உருவாக்கும் காரியமும் ஒருபுறம் நடந்தேறி வருகிறது.

ஒரு படைப்பாளியின் தனித்தன்மையையும் படைப்பாளுமையையும் அடையாளப்படுத்தி வாசகனுக்குக் காட்டுவது அவன் கையாளும் மொழிநடையாகும். ஆங்கில மொழியில் புகழ்பெற்ற பல எழுத்தாளர்களும், தமிழ் நாட்டைச் சேர்ந்த சில எழுத்தாளர்களும், தங்கள் எழுத்து நடையின் வலிமைக்காகவும், அழகுக்காகவும், செம்மைக்காகவும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். நம்மத்தியில் இந்த 'நடையழகு' பற்றிய அக்கறை குறைந்த அளவிலேயே இருக்கிறது. வாழ்க்கை பற்றிய சரியான பயில்வும்ää அது குறித்த விசாலப் பார்வையும், நடையில் தனித்தன்மையும் இருந்தால் ஒரு படைப்பாளி நிச்சயம் உயர்ந்த  நிலையைப் பெற முடியும்.

ஒருசிலரால் உருவாக்கப்படுகின்ற சாதனைகளை வைத்துக்கொண்டு நாம் திருப்திப்பட முடியாது. ஒரு நல்ல இலக்கியக் கூட்டத்துக்கோ அல்லது திரைப்படக்காட்சிக்கோ வருபவர்களின் 'சொற்ப அளவு' கவலையும் வேதனையும் அளிப்பதாகவே இருக்கிறது. ஈழத்திலிருந்து ஒருசில நல்ல கலை, இலக்கியச் சஞ்சிகைகள் வெளிவந்துகொண்டிருக்கின்ற போதிலும், இன்னும் இத்துறைகளில் நாம் செய்யவேண்டிய பாரிய பணிகள் பல இருக்கின்றன.

- ம. பாலசுப்பிரமணியம்
  வாசகர் - சுழிபுரம் 
 



எமது சமூகப்புலத்தில் இலக்கியம் என்பது தூறல் மழைபோன்றே காணப்படுகின்றது. அதற்குக் காரணம் கூட்டு முயற்சிகள் இன்மை.

இளைய தலைமுறையினர் கலை - இலக்கிய - சமூக சஞ்சிகைகள்ää சிறிய பத்திரிகைகள் நடாத்த முயற்சிக்கின்றார்கள். ஆனால் அவை ஓரிரு இதழ்களுடன் முடங்கிவிடுகின்றன (உ+ம் அம்பலம், நடுகை, அங்குசம், மானசதீபம், தூண்டி).

மற்றும் எழுத்தாளர்கள் புத்தகங்களை வெளியிடுகின்றார்கள், அவையும் முதலை முடக்கிவிடுகின்ற ஒன்றாகவும், அடுத்த புத்தகம் வெளியிடும் சிந்தனையை அவர்களிடமிருந்து அடியோடு அழிக்கின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றன. இவையெல்லாம் எமது இலக்கிய உலகிற்கு அபத்தமான நிகழ்வுகள், இதனால், புதிய வெளியீடுகள் அதிகம் வரமுடியாத நிலைமை இருக்கின்றது.

ஆகவே எழுத்தாளர்கள் சுயநலத்தைக் களைந்து, ஒருவருக்கு ஒருவர் உதவும் நோக்குடன் புத்தகங்கள் - சஞ்சிகைகள் - பத்திரிகைகள் என்பவற்றை வாங்கியும் விநியோகித்தும் ஆரோக்கியமான விமர்சனங்களைக் கூறியும் வருவார்களேயானால், ஈழத்து இலக்கியச் சூழல் செழுமை பெறும்.

- வி.பி. தனேந்திரா
  "தெளிவு" - ஆசிரியர்



எமது கலை இலக்கியச் செயற்பாடுகள் ஒருகாலத்தில் முனைப்புப் பெறுவதும்ää பின் தளர்ந்துபோவதுமான நிலையில்தான் உள்ளன. ஒருகாலத்திற்குரியவர்கள் பற்றியும், அவர்களது எழுத்துக்கள் பற்றியும் தொடர்ந்தும் பேசப்படுகிறது, ஆனால், அண்மைக் காலங்களில் புதிதாக இவற்றில் ஈடுபடும் இளைய தலைமுறையினர் பற்றிய பேச்சுக்கள் - அவர்களது செயற்பாடுகளுக்கான ஊக்குவிப்புக்கள் என்பன, மிகவும் குறைந்த நிலையில்தான் உள்ளன. அதனால், இலக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் இடங்களில்கூட பார்த்த - பழைய முகங்களைத் தவிர புதியவர்களைக் கண்டுகொள்ள முடியாமல் உள்ளது. தவிரவும், கலை, இலக்கியத் தளங்களில் செயற்படும் பலரிடம் நிலவிவரும் - இவர்களது வாழ்வியல் போக்குக்கும் படைப்புகளுக்கும் இடையிலான - முரண்நிலையும் புதியவர்களை அச்சமுறச் செய்கின்றது.

இந்நிலைகளில் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்கள்தான் எமது கலை - இலக்கியச் சூழலை புதியவீச்சுடன் வழிநடத்தும்.

மேலும், எமது மண்ணில் பற்பல புதிய சஞ்சிகைகள் தற்போது வெளிவருகின்றன. அவற்றை ஒருசேர - ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. எமது புத்தக விற்பனை நிலையங்கள் இவற்றை விற்பனை செய்வதற்கு அறவிடும் தரகுவீதத்தின் அதிகரிப்பால், சஞ்சிகைகளை வெளியிடுவோர் அவற்றை விற்பனைக்காகப் புத்தக விற்பனை நிலையங்களில் போடுவதைத் தவிர்த்துää தனிப்பட்ட விநியோகங்களிலேயே பெருமளவில் தங்கிநிற்கின்றனர், இதனால் பரவலான வாசக தளத்தை அவை எட்டமுடிவதில்லை, இந்நிலைகூட ஒருவித வெற்றிடத்தையே ஏற்படுத்துகின்றது!

- கி. செல்மர் எமில்
  à®µà®¾à®šà®•à®°à¯ - யாழ்ப்பாணம்
 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Apr 2024 22:39
TamilNet
HASH(0x5577fb3d6da0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Apr 2024 22:47


புதினம்
Fri, 19 Apr 2024 22:47