அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 24 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow சிவப்பு விளக்கு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சிவப்பு விளக்கு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சத்தியன்  
Saturday, 12 February 2005
சிவப்பு விளக்குகுழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்த சீன இசை நாடகமான (பீஜிங் ஒபேரா) 'சிவப்பு விளக்கு' க. ரதீதரனின் நெறியாள்கையில், 17.07.2004 இல், யாழ். கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்டது.

உறுதியான கொள்கையும் விடாமுயற்சியும் மனோபலமும் கொண்ட மனிதன், எந்தச் சங்கடமான நிலையிலும் தளம்புவதில்லை என்பது நாடகத்தின் பேசுபொருளாகும்.
சீனப் பொதுவுடைமைவாதிகள் யப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி ஈற்றில் வெற்றிகொள்கின்றனர்.
லி.யு.கோ., அவனது வளர்ப்புத் தாய், லி.யு.கோவின் வளர்ப்பு மகளாகிய மூவரும் சீன வம்ச வேறுபாட்டை உடைத்தெறியும் வகையில் அமைந்த சீனப் பொதுவுடைமைவாதக் குடும்பம்: சீனாவை யப்பானிய ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடும் பொறுப்புவாய்ந்த குடும்பமாயும் உள்ளது.

லி.யு.கோவின் குடும்பத்தாரால் பயன்படுத்தப்படும் 'சிவப்பு விளக்கு' - கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுள்ள சீனர்கள் ஒருவரை ஒருவர் இனங்கண்டுகொள்வதற்கும், இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குமான அடையாளச்சின்னமாகக் கைக்கொள்ளப்படுகிறது
 à®¨à®¾à®Ÿà®•à®®à¯ தொடங்கியதிலிருந்து நிதானமாகக் கொண்டுசெல்லப்பட்டாலும், இடையிடையே சில பலவீனங்கள் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. துணைப்பாத்திரங்களின் ஒத்துழைப்பில் ஏற்பட்ட நலிவே இதற்குக் காரணமாகும். பீஜிங் ஒபேராவிற்குரிய வகையில் பாடல்கள் கணிசமான அளவில் இடம்பெறவில்லை: அது ஒரு குறையாகவே தென்பட்டது. பாடல்களுக்கேற்ற வகையில் அசைவுகளும் இடம்பெறவேண்டியது அவசியமாகும்.

யப்பானியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான காட்சிகளை மேடையில் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பாராட்டப்படக்கூடிய வகையில் அமைந்திருந்தது. எந்தவித நெருடலும் அற்ற வகையில், சீனர்களுக்கும் யப்பானியர்களுக்கும் உரிய கராத்தே பாணியில் அசைவுகள் அமைந்திருந்தன. உச்சமான அல்லது இறுதிநிலை என்பதைப் புலப்படுத்தும் இடிமுழக்க இசைகள் வழங்கப்படாமல்ää ஓரிரண்டு இசைக்கருவிகளை மட்டும் கொண்டு அவற்றின் உச்சப்பயன்பாட்டின் துணையுடன் அசைவுகள் நிதானமாக அமைக்கப்பட்டிருந்தன.
நல்ல நாடகங்களை மேடையேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதனை இந்த நாடகம் உணர்த்தியது!  

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 24 Apr 2024 06:47
TamilNet
HASH(0x56257952d700)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 24 Apr 2024 06:47


புதினம்
Wed, 24 Apr 2024 06:47
















     இதுவரை:  24799330 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3353 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com