அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow சடாமுடியில் ஓர் ஓவியம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சடாமுடியில் ஓர் ஓவியம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சோ.பத்மநாதன்  
Saturday, 12 February 2005

சடாமுடியில் ஒரு ஓவியம்சிவபெருமானுடைய சடையை "செஞ்சடை" என்று கூறுவது மரபு. அவன் நடனம் ஆடும்போது விரித்த சடை தீக்கங்குகள் போலக் காட்சிதரும் என்று கவிஞர்கள் வர்ணிப்பர்.
இந்தச் சடையைத்தான் கொன்றையும் கங்கையும் பிறையும் அலங்கரிக்கின்றன. அவற்றைத் தொடர்புபடுத்திக் கற்பனைச் சித்திரம் ஒன்று தீட்டுகிறான் கவிஞன். எல்லா அழகுகளும் பொருந்திய சோலைகள் மலிந்த திருவாரூரில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய சடைக்காடு எதைப்போல் இருக்கிறதென்றால், நெருப்புப்போல் எனலாம்.

 â€œà®¤à¯†à®©à¯à®©à¯Šà®•à¯à®•à¯à®®à¯ சோலைக்  à®•à®®à®²à¯ˆà®ªà¯à®ªà®¿à®°à®¾à®©à¯ செஞ்சடாட à®µà®¿à®¤à®¾à®©à¯
 à®Žà®©à¯à®©à¯Šà®•à¯à®•à¯à®®à¯ என்னில் எரி à®¯à¯Šà®•à¯à®•à¯à®®à¯...”


அது சாதாரண நெருப்பல்ல, பொற்கொல்லன் பொன்னுருக்கும் நெருப்பு! சடையிற் செருகியிருக்கும் கொன்றைப்பூ பொன் போல் விளங்குகிறது. கொன்றையில் மொய்க்கும் வண்டு கரி போலக் காட்சி தருகிறது (கொன்றை - மஞ்சள் நிறம், வண்டு - கறுப்பு).

 â€œ.....அந்த எரியில் இட்ட
 à®ªà¯Šà®©à¯à®©à¯Šà®•à¯à®•à¯à®®à¯ கொன்றை
 à®•à®°à®¿à®¯à¯Šà®•à¯à®•à¯à®®à¯ வண்டு....”


 à®¤à®®à®¿à®´à¯à®¨à®¾à®Ÿà¯à®Ÿà®¿à®²à¯‡ ஒரு வழக்கம் இருந்தது. பெண் தனக்குத் தேவைப்படும் பொன்னகைக்கு பொற்கொல்லனிடம் நேரில்போய் 'ஓடர்' கொடுப்பாள். அளவு, மோடி என்பன பற்றிய திருப்தி இருக்கும் அல்லவா?

சிவபெருமான் தலையில் இருக்கும் கங்கை நகை செய்விக்க வந்த பெண்ணாகத் தெரிகிறாள் கவிஞனுக்கு:
 
“பொற்பணிசெய் மின்னொக்கும் கங்கை!”

எஞ்சியிருப்பது பிறை. பிறை வளைந்து இருக்கும். கூனற்பிறை என்ற தொடர் இலக்கியங்களில் அடிக்கடி வருவதுதானே! இந்தப்பிறை வயதுபோன பொற்கொல்லனைப் போலக் காட்சி தருகிறது என்று கற்பனை செய்கிறான் கவிஞன்.

“...கிழக்கொல்லன் ஒக்கும் அவ்வெண்  à®ªà®¿à®±à¯ˆà®¯à¯‡!”

ஆக, சிவன் சடையிற் சூடிய கொன்றையையும் கங்கையையும் பிறையையும் வைத்து ஓர் உயிரோவியம் தீட்டிவிடுகிறான் காளமேகம்:

 â€œà®¤à¯†à®©à¯à®©à¯Šà®•à¯à®•à¯à®®à¯ சோலைக் கமலைப் à®ªà®¿à®°à®¾à®©à¯
  à®šà¯†à®žà¯à®šà®Ÿà®¾à®Ÿà®µà®¿à®¤à®¾à®©à¯
  என்னொக்கும் என்னில் எரியொக்கும்,  
  அந்த எரியிலிட்ட;
  பொன்னொக்கும் கொன்றை கரியொக்கும்    
  à®µà®£à¯à®Ÿà¯; நற்பொற்பணி செய்
  மின்னொக்கும் கங்கை: கிழக்கொல்லன்  à®’க்கும்
  அவ் à®µà¯†à®£à¯à®ªà®¿à®±à¯ˆà®¯à¯‡!


(கமலை - திருவாரூர்: சடாடவி - சடையாகிய காடு)      


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 10:09
TamilNet
HASH(0x563148423870)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 10:09


புதினம்
Mon, 15 Jul 2024 10:09
     இதுவரை:  25360076 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1414 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com