அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow சமத்துவம் இல்லையேல் சமாதானம் சாத்தியமில்லை!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சமத்துவம் இல்லையேல் சமாதானம் சாத்தியமில்லை!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஆசிரியர்  
Saturday, 12 February 2005

ஐப்பசி மாதமென்றால் சாகித்திய மண்டலப் பரிசுகள் முக்கிய கவனத்தை ஈர்ப்பது இயல்புதான். வழமைபோல் தமிழில் ஏழு நூல்களிற்கும், சிங்களத்தில் 17 நூல்களிற்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய சாகித்திய கலா மகோற்சவம் ஒருகிழமையாக, கலாசார அமைச்சினால் கொழும்பில் நடத்தப்பட்டது; அதில் ஒருசில நிகழ்ச்சிகள்தான் தமிழிற்குரியவை. அதனையொட்டி வெளியிடப்பட்ட மலரிலும் நிகழ்ச்சி நிரல், வாழ்த்துச் செய்திகள் தவிர்ந்தவை சிங்களத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

அரசாங்கம் சமாதானத்தைப்பற்றிப் பெரிதாகச் சொல்கிறது. ஆனால், சமத்துவமற்ற நிலைமை தொடர்கிறது!
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றபெயரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் வாழ்விட உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளைப் பாவிக்கமுடியாத “பாதுகாப்பு” நிலைமை, கெடுபிடிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறும் மீன்பிடித்தொழில்.
மந்தமான புனர்வாழ்வுச் செயலுதவிகள்...
தொடரும் இத்தகைய பாரபட்சங்களில் கலாசாரத் துறையும் இணைந்துள்ளது என்பது தமிழ்மக்களிற்கு ஆச்சரியந்தரப் போவதில்லைத்தான்.

 à®†à®©à®¾à®²à¯, இனங்களுக்கிடையே சமத்துவம் நிலைநாட்டப்படாது போனால் நீடித்த சமாதானம் சாத்தியமில்லை என்பதை, அரசாங்கமும் தென்னிலங்கைப் பெரும்பான்மையினரும் என்று உணரப்போகின்றனரோ!


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 10:09
TamilNet
HASH(0x563148423870)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 10:09


புதினம்
Mon, 15 Jul 2024 10:09
     இதுவரை:  25360109 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1437 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com