அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow மகரந்தம் arrow La maison de poet
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


La maison de poet   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: செல்வி. மீரா பாலகணேசன்  
Wednesday, 20 March 2002

Jean Joubért என்னும் பிரெஞ்சுக் கவிஞரின் La maison de poet என்னும் கவிதைத் தொகுப்பில் இருந்து இக்கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பயணங்கள் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் கதைகளும் எழுதியுள்னார். இக்கவிஞர் பிரான்சின் தென்பகுதியில் மத்தியதரைக்கடலருகே உள்ள Montpellier என்னும் நகரத்தை அண்டி வாழ்ந்து வருகின்றார். இவர் எழுத்தை தனது முழுநேர பணியாக கொண்டிருக்கின்றார். இது வளரும் இளம் கவிஞர்களுக்கான கவிதைத் தொகுப்பாகும்.

பிரெஞ்சிலிருந்து இக்கவிதைகளை மொழிபெயர்த்தவர் 14 வயதான செல்வி. மீரா பாலகணேசன். யேர்மனியில் பிறந்து பிரான்சில் வளரும் இவருக்கு நுண்கலைகள் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. பாடும் திறன்கொண்டவர். மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் காட்டும் இவர் இலண்டனில் நடந்த மொழிபெயர்ப்பு பட்டறை ஒன்றிலும் கலந்து கொண்டவர். அந்த பட்டறையில் படிக்கப்பட்ட இக்கவிதைகள் மகரந்தத்தின் முதல் மொழிபெயர்ப்பு படைப்பாக அறிமுகம் செய்யபடுகின்றது.

கவிஞனின் இல்லம்

கவிஞனின் இல்லத்தில்
பறவைகள் அலுத்துப்போகமாட்டா.
ஏனெனில்
அங்கே கூண்டில்லை
வலையில்லை
இறக்கைகளாலான கட்டிலுமில்லை.
இரவு பகல்போல
கோடைகாலம் குளிர்காலம்போல.
சன்னல்கள் ஒவ்வொருநாளும் திறந்திருந்தன.
அழகான வெளிச்சமுள்ள மரங்கள்
அறைகளினுள் வளைந்து நின்றன.
அதில் பறவைகள் தங்கியிருந்து
தங்களின் பயணக் கதைகளை
அவைவைகளின் மொழிகளில்
விரித்துரைத்துக் கொண்டிருந்தன
களைத்துப்போன கவிஞன்
பழைய வைக்கோல் பாயில்
படுத்திருந்தவாறு
பறவைகளின் பாடல்களை
கேட்டுக்கொண்டிருந்தான்.
அவனுடைய கவிதைகளுக்கான
பட்டு இழையை
பறவைகள் மென்மையாய்
பின்னிக் கொண்டிருந்தன.

சின்ன விளக்கு
 
என்னுடைய சன்னலில்
ஒரு சின்ன விளக்கை ஏற்றுகிறேன்.
அந்த சின்ன நீல விளக்கு
என்னுடைய இதயத்தைப்போல
எல்லாச் சொற்களும் இரவில் இழுபடும்படி
தொலைந்து போன சொற்கள், காயமுற்றசொற்கள்,
நிலவொளியில் போதை கொண்ட சொற்கள்,
அடர்ந்த பனிப்படலத்தில் காதலான சொற்கள்,
நல்ல சொற்கள், கெட்ட சொற்கள்,
சின்னதும் பெரியதுமான சொற்கள்,
பறக்கும் சொற்கள், ஊர்ந்து செல்லும் சொற்கள்,
பளபளக்கின்ற சொற்கள்,
பாடுகின்ற சொற்கள்,
இருளுள்ளவை, விடுபட்டவையென
இரவின் எல்லாச் சொற்களுக்கும் தெரிய வேண்டும்
வானத்தின் கரையில்
ஒரு கவிஞனின் வீடு
அந்த சொற்களை
அழைக்க தாலாட்ட சூடாக்க
இதயத்தோடு கட்டியணைக்க
அவன் தயாராக இருப்பான்.

உண்மையான செல்வம்
 
ஏழையான அந்த வீட்டில்
புல் கூரையில் முளைக்கும்
கற்களில் ஆசைகொண்ட மரம்
அவைகளை நுனிவிரலால் தடவுகின்றது.
யார் தட்டுவது!
உள்ளே வாருங்கள் சூரியனே
இரவு இப்போதான் பறந்து போனது.
முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு தேனீ
பனித்துளி ஒன்றை அதில் வைக்கின்றது.
மிக ஏழையான குடிசையில்
இரவும் பகலுமாய்
ஓரு தங்கம் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்
காதல் எல்லா வர்ணங்களாலும்
ஆளப்பட வேண்டும்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 13:19
TamilNet
HASH(0x55846f289250)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 13:22


புதினம்
Thu, 18 Apr 2024 13:22
















     இதுவரை:  24777022 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2630 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com