அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 9 arrow எங்களுக்கானதொரு சினிமா!?
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எங்களுக்கானதொரு சினிமா!?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Thursday, 09 September 2004
பக்கம் 1 of 4

எங்களுக்கானதொரு சினிமா வளராமை குறித்து
ஒரு தமிழ் நிலைப் பார்வை


1
                                                         
நிதர்சனம்நாம் எதைப் பற்றிப் பேசுவதனாலும் அரசியலோடு இணைத்துத்தான் பேசவேண்டியிருக்கிறது. இது ஒரு வகையில் துரதிஸ்டவசமானதுதான். ஆனால் தவிர்க்க முடியாதது. நாங்கள் கடந்துவந்த வரலாறும் அந்த வரலாற்றுவழி அனுபவங்களும் அந்தளவு மோசமானவை. எளிமையாகச் சொல்வதானால் நாம் ஒரு ஒடுக்கப்பட்ட வரலாற்றில் வாழ்கிறோம். அந்த வரலாறு தழுவித்தான் எதையும் பரிசீலிக்க முடியும். இன்று ஈழத்தமிழர் ஒரு தனித்தேசமாக பரிணமித்திருக்கும் நிலையில் எங்களுக்கானதொரு சினிமா குறித்து பலரும் உணரத் தலைப்படுகின்றனர். விடுதலைப்புலிகளின் திரைப்படப்பிரிவான நிதர்சனம் இதற்கான அடித்தளத்தை என்றோ போட்டுவிட்டது. புலம்பெயர்  சூழலில் வாழும் கலைஞர்கள் சிலரும் குறும்பட, கதைப்பட முயற்சியில் தம்மை ஈடுபடுத்திவருகின்றனர். இனி எஞ்சியிருப்பதோ ஒரு கூட்டினைவின் மூலமான செயல் முனைப்புத்தான். நான் எங்களுக்கானதொரு சினிமாவை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பது பற்றி பேச முயலவில்லை. அந்தளவிற்கு நான் சினிமா குறித்த அறிவாளனுமல்ல. நான் எங்களுக்கானதொரு சினிமா வளர்ச்சியடையாமல் போனதற்கான காரணங்களை முழுமை தழுவி தொட முயல்கிறேன். ஒரு வேளை இந்த முழுமை தழுவிய தொடுதல், எங்களுக்கானதொரு சினிமாவின் அவசியத்தை உணர்த்தவும் கூடும்.


2

தர்மசேனமுதலில் நான் இப்படியொரு தலைப்பு நோக்கி சிந்திப்பதற்கான காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். கடந்த வருடம் சிங்கள திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்கா “சினியாத்திரா” என்ற பெயரில் தமிழர் தேசத்தின் பலபகுதிகளிலும் திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். திருகோணமலையிலும் அவ்விழா நடைபெற்றது. லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜா, சுமித்திரா பீரிஸ், அசோக்கா கந்தேகம, போன்ற முன்னனி சிங்கள நெறியாளர்களின் திரை வடிங்கள் கான்பிக்கப்பட்டன. பின்னர் எம்மவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றது. எம்மவர் சிலர் கூறியவை. “அவர்கள் எங்கேயோ போய்விட்டார்கள்”, “அவர்களோடு ஒப்பிட்டால் எங்களிடம் ஒரு மசிரும் இல்லை”, “நாங்கள் எங்களுக்கானதொரு சினிமாவை வடிவமைப்பதில் தவறிவிட்டோம்”. எங்களுக்கானதொரு சினிமா வளர்ச்சியை ஒடுக்குமுறை வரலாறு தழுவிப் பார்க்காமல் வெறுமனே அகநிலை சார்ந்து பார்த்தது என்னளவில் உறுத்தலாக இருந்ததுடன் பாரிய முரண்பாடாவும் இருந்தது. இப்படியொரு தலைப்பும் தேவையானது. எம்மவர்கள் சிலர் தம்மை அதி முற்போக்குவாதிகளாக அடையாளப்படுத்தும் அந்தரத்தில் யதார்த்தத்திலிருந்து தப்பியோடுவது விடயமறிந்தவர்களுக்கு புதியதகவலுமல்ல.




மேலும் சில...
ஆக்காண்டி
பொதுப்புத்தி அவமதிக்கப்படுகின்றது
சமாதானச்சுருள் திரை மாலை
அழுத்தம்
தமிழ்த் திரையுலகு: [பகுதி 1] [பகுதி 2]

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07
TamilNet
HASH(0x55f5199c69a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07


புதினம்
Thu, 28 Mar 2024 17:07
















     இதுவரை:  24713385 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6255 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com