அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 02 November 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழ்த் திரையுலகு: [பகுதி 1] [பகுதி 2]   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….யேசுராசா  
Sunday, 05 September 2004
பக்கம் 1 of 2

(தமிழ்த்தூது தனிநாயம் அடிகளார் நினைவுப்பேருரை-7ல் அ.யேசுராசா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. இது 08-05-2003 ல் இடம்பெற்றது. நான்கு பகுதிகள் கொண்ட இந்த சொற்பொழிவின் முதலிரண்டு பகுதிகள் தற்போது பிரசுரமாகின்றன.)

[பகுதி - 1] 

நெடுந்தீவிற் பிறந்து, தமிழியல் சார்ந்த தனது பணிகளினால் "தமிழ்கூறு நல்லுலகெங்கும்" மதிப்புப் பெறுபவராகத் தனிநாயகம் அடிகளார் உயர்ந்துள்ளார். ஒரு துறவியாக இருந்தபோதிலும் தமிழ் மீதான பற்றினைத் துறக்க முடியாதவராகவே அவர் வாழ்ந்தார்.

- பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை : கருத்தும் விளக்கமும்
- தமிழ்த்தூது
- ஒன்றே உலகம்
ஆகிய நூல்களை எமக்கு ஆக்கி அளித்துள்ளார்.

- தமிழ்ப் பண்பாடு
என்ற ஆய்விதழையும் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

உலகிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் "இந்தியவியல்" துறைகளில் தமிழ்மொழி இடம்பெறுவதற்கும் அரும்பணியாற்றினார். "அனைத்துலக தமிழாராய்ச்சிப் பேரவை"யினை 1964இல், உருவாக்கியதோடு, முதலாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு 1966இல், கோலாலம்பூரில் நடைபெறுவதற்கும் முக்கிய பங்காற்றினார். தனிச்சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிர்ப்பாக, 1956இல், கொழும்பு காலிமுகத்  திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியமையும், அரசாங்கம் விதித்த தடைகளை மீறி 1974இல், நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்தியதில் அவர் ஆற்றிய பணியும், சுயமரியாதை உணர்வுமிக்க "தமிழ்த் தேசியவாதியாக" அவரை இனங்காட்டுகின்றன.

1972 ஆம் ஆண்டளவில் பேராதனை அஞ்சலகத்தில் நான் பணியாற்றிய வேளை, அலுவல் காரணமாக அங்குவரும் அடிகளாருடன் கதைக்கும் அரிய வாய்ப்பு சில தடவைகள் மட்டுமே கிட்டிற்று. எனினும், தமிழ் மக்களின் பண்பாட்டில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் "தமிழ்த் திரையுலகு" பற்றிய ஆய்வினை, தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான "தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார்" நினைவுப் பேருரையாக நிகழ்த்தக் கிடைத்த இந்த வாய்ப்பினைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

தமிழ்த் திரைப்படங்கள் தமிழ் மக்களின் வாழ்விற் பிரிக்க முடியாத பகுதி ஆகிவிட்டன, தமிழகத்தின் யதார்த்த நிலையோ எமது சூழலை விடவும் இன்னும் தீவிரமானது திரைப்பட ஆய்வாளரான முனைவர் க. கோவிந்தன்,
"எந்த மக்கள் தொடர்புச் சாதனமும் திரைப்படச் செய்திகளின்றி வெளிவரமுடியாத இயல்பு நிலையும் நம் நாட்டில் உருவாகிவிட்டது. திரைப்படச் செய்திகள் இல்லாத பருவ இதழ்களையோ, நாளிதழ்களையோ, வானொலி நிகழ்ச்சிகளையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், அரசு சார்பான தொலைக் காட்சி நிறுவன நிகழ்ச்சிகளாயினும், தனியார் தொலைக் காட்சி நிறுவன நிகழ்ச்சிகளாயினும், இன்று திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளே மிகுதியாக இடம்பெறுவதை நாள்தோறும் பார்க்கிறோம்.அத்துடன், இவற்றை மக்களும் மிக  ஆவலோடு விரும்பிப் பார்க்கின்றனர் என்ற உண்மை நிலையையும் மறுப்பதற்கில்லை. ஆக, அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ள திரைப்படக்கலை, நம் மக்களை ஆட்டிப் படைக்கிறது"  [1] என்கிறார்.

இவ்வாறு மக்களை ஈர்த்து அவர்கள்மீது தாக்கத்தைச் செலுத்திவரும் தமிழ்த்திரைப்படங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது பொருத்தமானதொரு செயலாகவே தெரிகிறது.




     இதுவரை:  25957101 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2221 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com